Free Space

நாமல் ராஜபக்‌ஷ வழக்குடன் தொடர்புடைய நித்யா செனானிக்கு விளக்கமறியல்


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொடுக்கல் வாங்கல் செய்த “கவர்ஸ் கோப்பரேஷன் மற்றும் என்.ஆர். கன்சல்ட்டன் கம்பனி” ஆகிய இரு நிறுவனங்களினதும் பணிப்பாளராக செயற்பட்ட நித்தியா சேனானி சமரநாயக்க என்பவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சுஜானி போகொல்லாகம மற்றும் நித்யா சேனானி ஆகியோருக்கு கொழும்பு அலுத்கடை நீதிமன்றினால் அழைப்பாணை விடுவிக்கப்பட்டிருந்தது.

குறித்த இருவரும், குறிப்பிட்ட இரு நிறுவனங்களினதும் பணிப்பாளர்களாக செயற்பட்டவர்கள் என்பதோடு,  முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் மகளான சுஜானி போகொல்லாகம இன்றைய தினம் (16) நீதிமன்றிற்கு ஆஜராகியிருக்கவில்லை என்பதோடு, தான் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நீதிமன்றில் ஆஜரான நித்யாவை எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் திருமதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

லண்டன், எபர்டீன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற சுஜானி போகொல்லாகம, திறைசேரியின் ஆலோசக தரத்திலான பதவியில் இருந்தார் என்பதோடு, பொலிஸ் நிதி மோசடி பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், குறித்த பதவியை தனது தந்தையான முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் உதவியுடன் அப்பதவியை பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்‌ஷ வழக்குடன் தொடர்புடைய நித்யா செனானிக்கு விளக்கமறியல் நாமல் ராஜபக்‌ஷ வழக்குடன் தொடர்புடைய நித்யா செனானிக்கு விளக்கமறியல் Reviewed by Madawala News on 8/16/2016 08:33:00 PM Rating: 5