Oceas

இலங்கையில் முதலீடு செய்யும் எண்ணத்தை கைவிட்ட வொக்ஸ்வோகன்....


உலக புகழ் பெற்ற வாகன உற்பத்தி நிறுவனமான பொக்ஸ்வோகன் நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக நல்லாட்சி அரசு அறிவிருந்தது. 

அண்மையில் குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட பிரதமர்  இவ்வருட இறுதிக்குள் இலங்கையின் வடமேல் மாகாணத்தில் பொக்ஸ்வோகன் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிறுவனத்தின் இலங்கை வருகையூடாக இலங்கையில் குறைந்த விலையில் கார்களை விற்பனை செய்யமுடியும் எனவும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில் வழங்க முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில் பொக்ஸ்வோகன் இலங்கையில் முதலீடு செய்யும் திட்டத்தை கைவிட்டுள்ளதாக தகவல்கள வெளியாகியுள்ளன.

பிரதி அமைச்சர் ஹெரான் விக்ரமரத்ன தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார் .


இலங்கையில் முதலீடு செய்யும் எண்ணத்தை கைவிட்ட வொக்ஸ்வோகன்.... இலங்கையில் முதலீடு செய்யும் எண்ணத்தை கைவிட்ட வொக்ஸ்வோகன்.... Reviewed by Madawala News on 8/28/2016 11:21:00 PM Rating: 5