Thursday, August 25, 2016

பதுளை 'முஸ்லிம் கல்வி' உயரதிகாரிகளின் உரிய கவன ஈர்ப்பை பெறவில்லை !

Published by Madawala News on Thursday, August 25, 2016  | 

 

- வாஹிட் அப்துல் குத்தூஸ் –

பதுளை பஃ பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்காக புதிதாக நிமானிக்கப் பட்ட தொழுகை அறை மற்றும் பல்தேவை கட்டிடத் தொகுதி திறப்புவிழாஇபாடசாலை சாதனையாளர் பாராட்டுவிழா மற்றும் க "(உ/தர) ஆரம்ப நிகழ்வு ஆகியவை முப்பெரு விழாவாக பஃ பாத்திமா முஸ்லிம் மகளிர் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.  பாடசாலை அதிபர் திருமதி எம் ஏ ஹைருன் நிஷா முஸம்மில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில் பிரதம அதிதியாக ஊவா மாகாண முதலமைச்சர் திரு சாமர சம்பத் தசநாயக அவர்கள் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக அல் புர்கான் – கல்விஇமற்றும் மனித நேய சேவைகளுக்கான அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியான இ கௌரவ கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அல் ஹாஜ் ரிஷாத் பதியுத்தீன் அவர்களின் மன்னார் மாவட்ட இணைப்பாளருமான மௌலவி அல் ஹாஜ் தௌவபிக் அவர்களும் இ ஊவா மாகாண சபை உறுப்பினர் திரு ருத்ர தீபன் வேலாயுதம் அவர்களும் பங்கேற்றிருந்தார்கள் .

கல்லூரி அதிபர் திருமதி எம் ஏ ஹைருன் நிஷா முஸம்மில் உரையாற்றுகையில்.
 இக்கூட்டத்தில் தலைமையுரையையும் வரவேற்புரையையும் ஒருசேர நிகழ்த்திய பாடசாலை அதிபர் திருமதி எம் ஏ ஹைருன் நிஷா முஸம்மில் அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்இ ' கல்வி அதிகாரிகளால் 'கோழிக்கூடாக' ஏளனமாக சித்தரிக்கப் பட்ட எமது பதுளை பஃ பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி இ மிகக் குறுகிய காலத்தில் பல இமாலய சாதனைகளை தன்னகத்தே கொண்டு ஏனைய பிரபல பலம் பெரும் பாடசாலைகளுடன் சரிநிகர் சமானமாக இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது. பதுளை வலய மட்டத்தில் நடைபெற்ற ஆங்கில மொழிப் போட்டியொன்றில் எமது கல்லூரியூடாக முப்பது மாணவிகள் பங்கேற்று அதில் இருபத்தி இரண்டு பேர் முதலாம் இடத்தினை பெற்று மொத்தம் இருபத்தி எட்டு பேர் வெற்றி நிலைகளை கொண்டுவந்தார்கள் . 


இது எமது கல்லூரியில் ஈரூடக மொழி மூலம் கற்பித்தல் ஆரம்பித்ததன் பிரதிபலனாக கருதுகின்றேன். மாண்பு மிகு முதலமைச்சர் அவர்களே இ  இந்த நிகழ்வை மாற்றத்தின் ஒரு அடையாளமாக இவ்விடத்தில் பெருமையுடன் சுட்டிக் காட்டும் நான பல இன்னல்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் கடந்து சுமார் ஐந்து வருட குறுகிய கால வரலாற்றில் எமது கல்லூரியின் சாதனைகளின் சில உச்சங்களை உங்கள் முன் வைக்கலாம் என்று நினைக்கின்றேன் .  

✓ கடந்த இரண்டு வருட காலங்களாக பயிற்றுவிக்கப்பட்ட எமது கல்லூரியின் ஒன்பது மாணவிகளும் கபொத உயர்தரத்திற்கு தகுதி பெற்று சிறந்த பெறுபேறாக 8 யு 1டீ யை பெற்றமை.

✓ இவ்வருடம் (2016) புதிதாக ஆரம்பிக்கப் படவுள்ள க பொ த உயர் தரத்திற்கு சுமார் 25 மாணவிகள் பதுளை மாவட்டத்தின் பிரபல்யமான பாடசாலைகளில் இருந்து எமது பாடாலையை நம்பி வந்து சேர்ந்துள்ளமை.

✓ 57 மாணவிகளுடன் ஆரம்பித்த எமது கல்லூரி இன்று முன்னூறுக்கும் (  300) மேல் மாணவிகளை கொண்டுள்ளமை.

✓ கடந்த 2014 2015 ஆண்ண்டுகளுக்கான தேசிய மட்ட போட்டிகளில்  சுமார் 27 மாணவிகளுக்கு முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றுக் கொடுத்துள்ளமை.

✓ 2015ம் ஆண்டிற்கான   தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் 5 ம் இடத்திற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டமை.

✓ எமது கல்லூரி மாணவிகளுக்காக ஆறஅம்பிக்கப் பட்ட பாத்திமா அஹதியா பாடசாலை கடந்த இரண்டு வருடங்களாக தலா இருபத்தி ஐந்து மாணவிகள் பரீட்சைக்கு தோன்றி அனைத்து மாணவிகளும் சித்தி பெற்று அதில் ஆறு மாணவிகள் மூன்று பாடத்திலும் ஏ சித்திகளை பெற்று ஊவா மாகாணத்தின் முதல் நிலை அகதியா பாடசாலையாக தெரிவாகி யுள்ளமை.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே இமேற்சொன்ன எமது முயற்சிகளின் பலன்களை அடைய நாம் கடந்து வந்த பாதை மிக இலகுவானதாக இருக்க வில்லை . அதில் இப்பாடசாலை வரலாற்றில் என்றைக்குமே மறக்க முடியாததொரு சோக நிகழ்வாக எமது பாடசாலையில் சேர்ந்து கல்வி கற்றுக் கொண்டிருந்த சுமார் 90 மாணவிகளை மீண்டும் அல் அதான் ம வியில் கொண்டு சேர்த்தார்கள் . அப்போது 147 மொத்த மாணவிகளை கொண்டிருந்த எமது கல்லூரி வெறும் 57 மாணவிகளை கொண்டு மீண்டும் ஆரம்பித்திலிருந்து பயணிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப் பட்டோம் .
 
இப்பாடசாலை ஆரம்பிக்கப் பட்டு சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பின் நடந்த  ஒரு நிகழ்வை இவ்விடத்தில் ஞாபகப் படுத்துவது சிறந்தது என்று நினைக்கின்றேன் . 

இப்பாடசாலையை அக்காலத்தில் பதுளையில் இயங்கிய ஒரு சமூக தொண்டு நிறுவனமான 'உமேடா' அமைப்பின் கட்டிடமான 30 x60 ஒரு சிறிய கட்டடத்தினுள் தான் ஆரம்பித்தோம். 

ஆரம்பிக்கப் பட்டு சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பின் ஒரு கல்வி அதிகாரி ( யு ழு - நிர்வாக உத்தியோகத்தர்) இப்பாடசாலைக்கு உத்தியோகப் பூர்வமாக வருகை தந்திருந்தார் . அவருடைய கருமங்களை மேட்கொண்டிருந்த வேளை என்னிடத்தில்  அவர் கேட்டார் ' இப்பாடசாலைக்கு ஒரு ஒழுக்காற்றுக் குழு இல்லையா ? ' என்று. பின்பு அவரே மீண்டும் கேட்டார் கோழிக் கூடு போன்றதொரு கொட்டகைக்கு ஒழுக்காற்றுக் குழு ஒரு தேவையா ? என்று. அவர் அன்று கிண்டல் செய்த அந்த 'கோழிகூ டு' தான் இன்று உங்கள் அனைவரின் முன்னிலையில் தலை நிமிர்ந்து நிற்கின்றது .

கல்வி அதிகாரியால் 'கோழிகூடு என்று ஏளனமாக கூறப்பட்ட 'உமேடா' அமைப்பின் 30 x 60 கட்டிடம்
 
 
நாம் எமது பெண் பிள்ளைகளின் மார்க்க கலாசார தனித்துவங்களை பேணி கல்வி கற்கக் கூடியதொரு சூழலை உருவாக்கும்  ஒரு இலட்சியப் பயணமாகவே இக்கல்லூரி ஆரம்பிக்கப் பட்டது. ஆனால் தரம் ஐந்து வரை மட்டுப்படுத்தப்பட்ட தொரு ஆரம்ப பாடசாலையாகவே இதை அதிகாரிகள் நிர்வகிக்க நினைத்தார்கள்.    

தரம் ஆறு முதல் மீண்டும் எமது மாணவிகளை ப/சரஸ்வதி தேசிய பாடசாலையில் சேர்க்குமாறு எமக்கு உத்தியோகப் பூர்வமாக அறிவித்தார்கள். உண்மையாகவே ஒரு மகளிர் கல்லூரியின் தேவை தரம் ஆறு தொடக்கமே ஆரம்பிக்கும் நிலையில் தரம் ஆறுமுதல் பதினொன்று வரைக்குமான பாடசாலையாக மாற்ற உத்தியோகப்பூர்வ அனுமதியை பெற பாரியதொரு போராட்டத்தை மீஎண்டும் நடத்த வேண்டி ஏற்பட்டது. குறித்த அனுமதியை தர பிரதான தடையாக இடப் பற்றாக்குறையை கல்வியதிகாரிகளால் சுட்டிக் காட்டப் பட்டது. அந்த நிலையில் மலையக முஸ்லிம் கவுன்சில் மற்றும் எமது பெற்றார்களின் முயற்சியால் நாம் இன்று ஒன்று கூடி பேசிக்கொண்டு இருக்கும் இக்கேட்போர் கூடம் கட்டப் பட்டது. அதன் பிறகே எமக்கு தரம் ஆறுமுதல் பதினொன்றுவரையான வகுப்புகளை நடத்த உரிய அனுமதி கிடைத்தது.
 

மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களே இந்த பாடசாலை ஆரம்பித்து கடந்த ஐந்து வருட காலத்திற்குள் எமக்கு தேவையான எந்த வொரு தளபாடங்களும் எமக்கு கல்வி அமைச்சினூடாகவோஇ கல்வி திணைக்களத்தினூடாகவோ இதுவரை கிடைக்கவில்லை. இன்று எமது பிள்ளைகளின் வகுப்பறைகளை நீங்கள் சென்று பார்வையிட்டால் அவர்கள் எமது பெற்றார்கள் இ நலன்விரும்பிகள் வாங்கிக் கொடுத்த நாட்காளிகளிலும் மேசைகளிலும் அமர்ந்தே கல்வி கற்கின்றார்கள் என்ற உண்மையை நிதர்சனமாக கண்டுகொள்வீர்கள்.கட்டிளமை பருவ மாணவியொருவர் பாலர் கதிரையில் அமர்ந்து பல மணி நேரம் கற்பதில் உள்ள கஷ்டத்தை நீங்கள் அறிவீர்கள்.
     கௌரவ முதலமைச்சர் அவர்களே இ நாங்கள் கூடியிருக்கும் இக்கட்டிடத்திற்கு எதிரில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டிடத்தின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் கடந்த 2012 ம் ஆண்டு கட்டுவதற்காக வருடாந்த செயற்திட்டத்தில் உள்வாங்கப் பட்டிருந்தது . ஆனால் இதுவரை அது கட்டிமுடிக்கப் படவில்லை. கடந்த நான்கு வருடங்களாக இதுபற்றி உரிய அதிகாரிகளுக்கு பலமுறை வேண்டுதல் விடுத்து கடித மூலம் அறிவித்துள்ளோம் . ஆனால் இதுவரை எமது நியாய பூர்வமான எமது வேண்டுதலை எந்த ஒரு அதிகாரியும் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை.
 
கௌரவ அமைச்சர் அவர்களே இ நாங்கள் இன்று முதல் ஆரம்பிக்கும் இந்த கலை வர்த்தக பிரிவுகளுக்கான உயர்தர பிரிவும் பல கட்ட போராட்டங்களை கடந்து இறுதியில் உங்களின் நேரடி பணிபுரையின் பின்பு தான் எமக்கு அனுமதி கிடைத்தது . கடந்த   2014ம் ஆண்டு முதல் நாம் இதற்காக அலைக்கழிக்கப் பட்டுள்ளோம் . 
எமது பாடசாலையின் போக்கை  பொதுவாக 'வேகம் கூட' என்று நிர்வாகிகள் கூறுவதுண்டு. சில வேளை அவர்கள் பார்வையில் அது உண்மையாக இருக்கலாம். ஆனால் இன்று எமது பிரதேச ஏனைய பெரும்பான்மை பாடசாலைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது போதுமான வேகத்தை நாம் இன்னும் அடைய வில்லை என்றே கூற வேண்டும்

விஷாகா மகளிர் தேசிய கல்லூரி இவிகாரமஹதேவி கல்லூரிஇ மத்திய கல்லூரி போன்ற பெரும்பான்மை பாடசாலைகளில் ஒருபோதும் பெறுபேறுகள் வீல்சியடைவதில்லை. ஏனென்றால் அப்பாடசாளைகளின் பெறுபேறுகளை வீழ்ச்சியடைய எமது கல்வித் திணைக்கள உயரதிகாரிகள் விடுவதில்லை. 

உதாரணமாக அப்பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கல்வித் திணைக்கள உயரதிகாரிகள் ஒன்று கூடி கலந்தாலோசித்து ஒரு திறமையான அதிபரை அங்கு நியமித்து விடுவார்கள். அப்பாடசாலைகளுக்கு அதிபராக நியமிக்கப் படுபவர்கள் அநேகமாக கோட்டக் கல்வி காரியாலயங்களிலோ வலய கல்வி காரியாலயங்ளிலோ பணிப்பாளர்களாக அல்லது உதவிக் கல்வி பணிப்பாளர்களாக கடமையாற்றி கொண்டிருபவராகவே இருந்திருப்பார். ஆனால் எமது தாய் பாடசாலையான பதுளை பஃ அல் அதான் மவிக்கு கடந்த பத்து வருட காலத்தில் எத்தனை அதிபர்கள் மாற்றப் பட்டுள்ளார்கள். அதாவது எமது முஸ்லிம் பாடசாலைகளுக்கு நீங்கள் தருவதை மாத்திரமே நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையில் எமது சமூகம் உள்ளது.
 
நான் இங்கு சொன்ன கருத்துக்கள் வெறும் கற்பனைகள் அல்ல.அதிபர் கூட்டங்களுக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் நேரடியாக நான் பெற்ற எனது அனுபவங்களையே உங்கள் முன் எடுத்துரைத்தேன்.

ஆகவே தான் நான் கூறுகின்றேன் இன்றைய பெரும்பான்மை பாடசாலைகளின் தரத்தை அடைய வேண்டும் என்றால் நாங்கள் இன்னும் வேகமாக ஒடவேண்டியுள்ளது. அப்படி ஓடினால் தான் இன்னும் ஐம்பது வருடங்களின் பின்பாவது அப்ப்பாடசாளைகளின் தரத்தை நாம் எட்டமுடியும் .
        
கௌரவ முதலமைச்சர் அவர்களே எமது பாடசாலையின் ஐந்து வருட வரலாற்றில் இன்று தான் முதன் முதலாக நாம் கல்வி சம்பந்தமான இவ்வாறானதொரு விழாவை நடத்துகின்றோம் . நாம் அரசியல் வாதிகளை அழைத்து வந்து பொய்யாக முகஸ்துதிக்காக அவர்களை போற்றி புகழ்ந்து  வாழ்த்தி வழியனுப்ப நாங்கள் விரும்ப வில்லை. ஆனால் உங்கள் போக்கை அவதானித்த போது நீங்கள் மாகாண முதலமைச்சராக பதவி ஏற்ற நாள் தொடக்கம் இன மத பேதமின்றி சமூகங்களுக்கு மத்தியில் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றீர்கள். குறிப்பாக கல்விரீதியாக இம்மாகாணத்தை முன்னேற்ற பலதிட்டங்களை செயற்படுத்தும் நீங்கள் குறுகிய காலத்திற்குள் கூடுதலான முஸ்லிம் பாடசாலைகளுக்கு நேரடியாக விஜயம் செய்து பல அபிவிருத்தி திட்டங்களை வழங்கியுள்ளீர்கள். 

ஆகவே தான் மலையக முஸ்லிம் கவுன்சிலின் வேண்டுதலில் அல் புர்கான் – கல்விஇமற்றும் மனித நேய சேவைகளுக்கான இலங்கை அமைப்பின் மூலம் கட்டிதரப் பட்ட இவ்விரண்டு மாடிக் கட்டிடத்தை உங்கள் கரங்களால் திறந்து வைத்து நாங்கள் பெருமையடைகின்றோம்' என்றும் கூறி முடித்தார்.
 
இக்கூட்டத்தில் சிறப்பு அதிதிகளாக   பதுளை முன்னாள் பிரதி மேயரும் பதுளை பஹ்மியா  அரபிக் கல்லூரியின் தலைவருமான அல் ஹாஜ் எ எச் எம் ஜாவ்பிர் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் அல் ஹாஜ் எஸ்எச் எம் மன்சூர் . அல் புர்கான் – கல்விஇமற்றும் மனித நேய சேவைகளுக்கான  அமைப்பின் பணிப்பாளர் அல் ஹாஜ் ஜே எம் நவ்பர் கௌரவ கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அல் ஹாஜ் ரிஷாத் பதியுத்தீன் அவர்களின் பதுளை மாவட்ட இணைப்புச் செயலாளரும் அ இ ம கா அரசியல் அதிகார சபையின் உறுப்பினருமான மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவர் ஏ எம் எம் முஸம்மில் அவர்கள்பண்டாரவளை டோர் நேஷன் அமைப்பின் அல் ஹாஜ் ஹில்மி அசீஸ் உற்பட நிர்வாக உத்தியோகத்தர்கள் பதுளை ஜும்மா பள்ளி நிர்வாக சபை உறுபினர்கள் பதுளை பைதுஸ் சகாத்  மற்றும் பதுளை பண்டாரவளை பசறை வை எம் எம் ஏ உற்பட பள்ளிவாயல் நிர்வாக சபையினர் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மலையக முஸ்லிம் கவுன்சில் உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் பெற்றார்கள் உற்பட பெருந்திரளான பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top