Free Space

மாவனெல்லை , ஹெம்மாத்தகம பிரதான வீதியில் ஒரு சடலம்.... பல வகையான சந்தேகங்கள் :(



மாவனெல்லை , ஹெம்மாத்தகம பிரதான வீதியில் இனந்தெரியாத இளைஞனின் சடலமொன்று கிடப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்விளைஞன், டெனிம் உடுத்தியிருப்பதாகவும், சடலத்தை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழுவும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளதாலும்,எமக்கு கிடைத்து வரும் தகவல்களை வைத்து பார்க்கும் போதும்,  இச்சடலம் நேற்று முன்தினம் கொழும்பில் கடத்தப்பட்டு  கப்பம் கேட்கப்பட்ட நபருடையதாக  இருக்குமோ என  சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
மாவனெல்லை , ஹெம்மாத்தகம பிரதான வீதியில் ஒரு சடலம்.... பல வகையான சந்தேகங்கள் :( மாவனெல்லை , ஹெம்மாத்தகம பிரதான வீதியில் ஒரு சடலம்.... பல வகையான சந்தேகங்கள் :( Reviewed by Madawala News on 8/24/2016 11:58:00 PM Rating: 5