Free Space

மாயமாய் மறைந்த திதுலன விளம்பரப்பலகையும் கல்முனைக்குடி தைக்கா வீதியின் புனரமைப்பும்...

-AC. Faizal-

பல வருடங்களாக எந்த வித புரனமைப்பும் இல்லாமல் மிகமோசமாக காட்ச்சி அளிக்கின்ற வீதிகளில் தைக்கா வீதியும் ஒன்றாகும்.இவ்வீதியை கொங்கிறீட் வீதியாக புரனமைப்பதற்க்கு நெடுஞ்சாலை அமைச்சினால் ஐம்பது இலட்ச்சம் (5,000,000)ரூபா நிதிஒதுக்ப்பட்டுள்ளதாக கடந்த 2015.12.04 ம் திகதி வேலையை ஆரம்பித்து வைக்கும் முகமாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவருமான கௌரவ HMM ஹரீஸ் அவர்களினால் திதுலன என்று  பொறிக்கப்பட்ட அவருடைய நிழல் படம் தாங்கிய பெயர் பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. 

இவ்வைபவத்தில் இவ்வீதியில் அமைந்திருக்கும் அன்சார் சுன்னத் ஐமாஅத் ஜும்மா பள்ளி வாசல் நிர்வாகத்தினர் உட்பட பல பொது மக்களும் ஆவலோடு கலந்து சிறப்பித்தனர்.இதில் வீதி அதிகார சபை பொறியியளாளர்களும் கலந்து கொண்டனர். 

இதைத்தொடர்ந்து பள்ளி வாசலில் கூட்டமும் நடைபெற்றது. இதன்போது நிர்வாகத்தினரால் ஹரீஸின் இச்சேவையை பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட நிகழ்வாகும். இது சம்மந்தமாக  முகநூல்களிலும், இணையத்தலங்களிலும்,பத்திரிகைகளிலும் எடுப்பான பல செய்திகள் வந்தன. 

இருந்தபோதும் ஒன்பது (09) மாதங்கள் கடந்த நிலையில் எந்தவிதப்புரனமைப்பும் இல்லாமல் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்ட ஹரீஸின் நிழல் படம் தாங்கிய திதுலன விளம்பரப்பலகை இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்துள்ளது.

  
இதனால் அவ்வீதியில் வசிக்கும் மக்களும்,பள்ளி வாசல் நிர்வாகத்தினரும் விசனம் அடைந்துள்ளனர்.செய்ய முடியாத வேலைகளை ஆரம்பித்து வைப்பதெற்க்கு வீதி அதிகார சபை பொறியியளாளர்களும் அரசியல்வாதிகளோடு இணைந்து மக்களை ஏமாற்ற நினைப்பது மிக மன வேதனைக்குரிய விடயமாகும் என மக்கள் அங்கலாய்க்கின்றர்.

எனவே இனிவரும் காலங்களிலாவது அரசாங்த்தினால் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தக்காறரை தெரிவு செய்தபின்னர் வீதி புரனமைப்பு வேலைகளை ஆரம்பித்து துரிதமாக முடித்துவைத்து மக்கள் சிரமமின்றி பயன்பெற வீதி அதிகார சபை முன்வரவேண்டும் என்பதே மக்களின் தாழ்மையான வேண்டுதலாகும்.

2015.12.04 ம் திகதி கல்முனைக்குடி தைக்கா வீதி புரனமைப்பு சம்பந்தமாக முகநூல்களிலும்,இணையத்தளங்களிலும்,பதிரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்ட சில நிழல் படங்களை இங்கே காணலாம்.

மாயமாய் மறைந்த திதுலன விளம்பரப்பலகையும் கல்முனைக்குடி தைக்கா வீதியின் புனரமைப்பும்... மாயமாய் மறைந்த திதுலன விளம்பரப்பலகையும்  கல்முனைக்குடி தைக்கா வீதியின் புனரமைப்பும்... Reviewed by Madawala News on 8/29/2016 07:39:00 PM Rating: 5