Oceas

மூதூர் ,தோப்பூர் மக்கள் வெளியேற்றப்பட்ட பத்தாண்டு ஈரநினைவுகள்


தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி

2016.08.02

மூதூர் மக்கள் வெளியேற்றப்பட்ட பத்தாண்டு ஈரநினைவுகள் எனும் தலைப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கௌரவ ஜே.எம்.லாஹிர் அவர்களின் தலைமையில் இன்று(௦2) காலை - திருகோணமலை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாகிர்  உரையாற்றுகையில் 02.08.2006  அன்று மூதூர் தோப்பூர் பகுதிகளில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு  உள்ளாகி  இற்றைக்கு  10 ஆண்டுகள் ஆகும். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மூதூர் தோப்பூர் பகுதிகளை நள்ளிரவோடு கைப்பற்றியதோடு பலமான பல பிரங்கி தாக்குதல்களையும் நடத்தினர் இதனால் மறுநாள் காலை மூதூரின் பல பிரதேசங்களில் ஜனாஸாக்கள் கிடந்ததோடு மூதூரை விட்டு வெளியேறுமாறும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக அறிவித்ததை அடுத்து மக்கள் எட்டாம் மாதம் ௦2 திகதி ஜும்மா தொழுகையும் தொழாமல் மூதூர் ,தோப்பூர் பிரதேசாங்களை விட்டு பலவந்தமாக வெளியேற்றினர். வெளியேறுவதற்கு கினாந்தி முனை ஊடாகவே செல்ல வேண்டும் என்று நிர்ப்பந்தித்தோடு அப்பகுதியில் வைத்து கடுமையான மல்டி பெறல் தாக்குதலில் 54 முஸ்லீம் சகோதரர்கள் உயிர் இழந்தார்கள். இத்தாக்குதலில் உயிர்  இழந்த சகோதரர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும், இன்றைய தினத்தை அவர்களுக்கான தினமாக மக்கள் நினைவு கூருமாறும்,மிகவும் பணிவாக வேண்டுகின்றேன். அத்தோடு  யுத்த காலங்களில் உயிர் நீத்த சகோதரர்களுக்காகவும் , அனர்த்தங்களின் போது உயிர் இழந்த சகோதரர்களுக்காகவும்,கடத்தப்பட்டு இதுவரையும் விடுவிக்கப்படாத சகோதரர்களுக்காகவும் பிரார்த்திக்குமாறு கோருகின்றேன் என்று குறிப்பிட்டார்.

மூதூர் ,தோப்பூர் மக்கள் வெளியேற்றப்பட்ட பத்தாண்டு ஈரநினைவுகள் மூதூர் ,தோப்பூர் மக்கள் வெளியேற்றப்பட்ட பத்தாண்டு ஈரநினைவுகள் Reviewed by Madawala News on 8/02/2016 10:37:00 PM Rating: 5