Free Space

சில ஊடகங்கள் பொறுப்பற்று பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன..


அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட பொத்துவிலுக்கு கோட்டத்திற்கு, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை கோட்டங்களிலிருந்து 42 ஆசிரியர்களை இடமாற்றம் வழங்குவது தொடர்பில், "முடிந்தால் இவ்விடமாற்றத்தை றிசாட் பதியுத்தீன் அமைச்சர் நிறுத்திக் காட்டட்டும்"  என்று சவால் விட்டதாக "ஶ்ரீலங்கா முஸ்லிம்" என்ற செய்தி இணையத்தளத்தில் "ஜமால்" என்பவர் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக, பொத்துவிலைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர் தெரியப்படுத்தியே எனக்குத் தெரிய வந்தது.

பொத்துவில் இரத்தல் பிரதேச பள்ளியடி வட்டை, அக்கரைப்பற்று வட்டமடு போன்ற பிரதேசங்களில் விவசாயம் செய்வது தொடர்பிலும் மற்றும் ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு, அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்தல், ஜனாதிபதியின் செயலாளருடனான சந்திப்பு போன்றவற்றில் ஈடுபட்டுக்கொண்டு, கடந்த மூன்று தினங்களாக கொழும்பில் இருக்கும் போது, நான் கருத்துக் கூறியதாகக் கூறி செய்தி வந்திருப்பது ஆச்சரியமாகவும் உள்ளது. நகைப்பாகவும் உள்ளது. 

யாரிடம் சவால் விட்டேன்? எப்போது சவால் விட்டேன்? யார் யார் அங்கிருந்தார்கள்? என்பதை அவர் கூறினால் நானும் தெரிந்து கொள்ளலாம். நான் சிறுபிள்ளைத்தனமாக யாரிடமும் சவால் விடுவதே கிடையாது.  இந்த செய்தியின் அரசியல் நோக்கம் எமக்குப் புரியாமலும் இல்லை. சிலர் இவ்விடயத்தில் போலியான அரசியல் போட்டியை உருவாக்கி குளிர்காயப் பார்க்கிறார்கள். தமது இடமாற்றத்தை நிறுத்தப் பார்க்கிறார்கள். 

பொத்துவிலுக்கு ஆசிரியர்கள் வழங்கியே ஆக வேண்டும். அதில் கல்வி அதிகாரிகள் கட்சி பேதங்களுக்கப்பால் சதந்திரமாக முடிவெடுக்க வேண்டும். இதனை நாங்கள் அவதானித்துக் கொண்டிருப்போம் இன்ஷா அல்லாஹ்
சில ஊடகங்கள் பொறுப்பற்று பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன.. சில ஊடகங்கள் பொறுப்பற்று பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன.. Reviewed by Madawala News on 8/10/2016 07:32:00 PM Rating: 5