Free Space

ஏறாவூரில் இருந்து அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு படகில் செல்ல முயற்சித்து சிக்கியவர்கள் பெயர் விபரம் பொலிசாரால் வேளியிடபட்டது.



ஏறாவூர் பிர­தே­சத்­தி­லி­ருந்து அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு படகில் செல்ல முயற்­சித்த 18 பேர் வாழைச்­சேனை கடலில் வைத்து கடற்­ப­டை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டு திரு­கோ­ண­மலை, கடற்­படை முகா­முக்கு கொண்டு வரப்­பட்டு இர­க­சியப் பொலி­ஸா­ரினால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். இச்­சம்­பவம் பற்றி மேலும் தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வது,

அவுஸ்­தி­ரே­லியா செல்லும் நோக்கில் ஏறாவூர் பிர­தே­சத்­தைச்­சேர்ந்த 14 முஸ்­லிம்­களும் 4 தமிழ் பய­ணி­களும் படகில் பய­ணித்­த­வேளை திரு­கோ­ண­மலை கடற்­ப­டை­யினர் மேற்­படி 18 பேரையும் வாழைச்­சேனைக் கடற்­ப­ரப்பில் வைத்து 15 ஆம் திகதி காலை கைது செய்­துள்­ளனர்.கைது செய்­யப்­பட்­ட­வர்கள் ஏறாவூர், வாழைச்­சேனை மற்றும் ஓட்­ட­மா­வடிப் பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பயணம் செய்ய இருந்த அனை­வரும் ஆண்கள் எனவும் படகில் பயணித்த நூர் முஹம்­மது நஜு­முடீன், நூர் முஹம்மட் முர்­சுதீன், இலவத் தம்பி முஹம்மட் அனஸ், ஆதம்­பாபா, சைட் செய்­யது ரவீப், தாவூத் முஹம்­மது கஜீன், முஹம்­மது சுபைர் சபார், முஹம்மது ஹனிபா, முஹம்மது ரசூல் ஹான், அஹமட் லெப்பை, முஹம்மது உஸைன், அர்­சுதீன், ரிபாஸ், உஷைன் இஸடீன், ஆகியோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் எனவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

இதற்­கி­டையில் ஏலவே இப்­பி­ர­தே­சங்­க­ளி­லி­ருந்து நீர்­கொ­ழும்­பி­னூ­டாக அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்குச் சென்ற 25 பேர் அவுஸ்­தி­ரே­லிய பாது­காப்புப் படை­யினால் கைது செய்யப்பட்டு கடந்த 27 நாட்களுக்கு பின் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
ஏறாவூரில் இருந்து அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு படகில் செல்ல முயற்சித்து சிக்கியவர்கள் பெயர் விபரம் பொலிசாரால் வேளியிடபட்டது. ஏறாவூரில் இருந்து அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு படகில் செல்ல முயற்சித்து சிக்கியவர்கள் பெயர் விபரம் பொலிசாரால் வேளியிடபட்டது. Reviewed by Madawala News on 8/17/2016 11:46:00 AM Rating: 5