Accaddemy

மிகச்சிறிய நிலப்பரப்புக்குள் சுருட்டப்படும் ஐ. எஸ்... முள்ளிவாய்க்காலாக மாறும் லிபியா.



- தில்ஷான் முகம்மத் -

மூன்று நாட்களுக்கு முன்னர் சிரியாவின் Jarablus என்ற நகரை துருக்கி இராணுவத்திடம் பறிகொடுத்த ஐ எஸ் இனர் , நேற்று மோசூல் நகருக்கு அருகாமையில் இருக்கும் கய்யாரா  என்ற நகரை ஈராக்கிய இராணுவத்திடம் பறிகொடுத்திருக்கிறார்கள்.

அமேரிக்கா ஆக்கிரமிப்பில் ஈராக் இருந்தபொழுது கய்யாராவில்தான் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படை தளம் இருந்தது என்பதும் கய்யாராவுக்கும் மொசுலுக்கும் இடையிலான தூரம் மிகச்சரியாக கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான தூரமாகும் (60 Km ) என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒருபக்கம் சிரியாவிலும் ஈராக்கிலும் உலகின் கவனம் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மறுபக்கம் சத்தமில்லாமல் லிபியா இராணுவம் ஐ எஸ் ஐ  மிகச்சிறிய நிலப்பரப்புக்குள் சுருட்டிகொண்டு வருகிறார்கள்.

லிபியா முள்ளிவாய்க்கால் என்றும் சொல்லலாம்.

இதில் இருந்து “தந்திரோபாயமாக பின்வாங்க” வேண்டும் மத்திய தரைக்கடலில் குதிப்பதை தவிர வேறு வழிகள் எதுவும் இல்லை.

இந்த ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முன்பாக லிபியாவில் இருந்து ஐ எஸ் கட்டுப்பாட்டு பகுதிகளை “துப்பரவாக “ துடைத்துவிடுவோம் என்பதே லிபியா இராணுவத்தின் திட்டமாக இருந்தாலும்,

முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் பொதுமக்கள் வெளியேறுவதை பொறுத்தே லிபியா இராணுவத்தின் இறுதி வெற்றி தங்கியிருக்கிறது.
மிகச்சிறிய நிலப்பரப்புக்குள் சுருட்டப்படும் ஐ. எஸ்... முள்ளிவாய்க்காலாக மாறும் லிபியா. மிகச்சிறிய நிலப்பரப்புக்குள் சுருட்டப்படும் ஐ. எஸ்...  முள்ளிவாய்க்காலாக மாறும் லிபியா. Reviewed by Madawala News on 8/26/2016 02:13:00 PM Rating: 5