எனது பெயரில் சாட்டோ மன்சூர் இயக்கும் போலியான முகநூலில் பாலியல் வீடியோ கணக்கறிஞர் றியால்..


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

நேரடி ஓடியோ: றியாலின் குற்றச்சாட்டு:-



கல்குடா பிரதேசத்தில் இருந்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்ட கணக்கறிஞரும்இ சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினருமான றியாலினுடைய பெயரில் HMM.Riyal Next MP எனும் போலியான முக நூல் இயக்கப்படுவதாகவும் அதனை சாட்டோ மன்சூர் எனும் வை.எல்.மன்சூர் இயக்குவதாகவும் குற்றம் சாட்டுகின்ற கணக்கறிஞர் றியால் குறித்த முகநூலில் தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சாட்டோ மன்சூர் பாலியல் சம்பந்தமான வீடியோவினை பதிவேற்றிருப்பதாக தெரிவிக்கின்றார்.

இது சம்பந்தமாக ஊடகங்களுக்கு தெரிவிக்குமாறு என்னை இன்று காலை தொலை பேசி மூலம் தொடர்பு கொண்ட உயர்பீட உறுப்பினர் றியால் கூறியதாவது குறித்த போலியான முக நூலானது வை.எல்.மன்சூர் எனும் சாட்டோ மன்சூரினால் இயக்கப்படுவதாக எல்லோராலும் சந்தேகிக்கப்படுவதாகவும் அத்தோடு இன்று எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பாலியல் வீடியோ ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்த கணக்கறிஞர் றியால் திட்டமிட்டே தனது பெயரினை கெடுப்பதற்காக குறித முகநூலானது இயக்கப்படுவதாக தெரிவித்தார்.

ஆகவே குறித்த முக நூலினை முகநூல் பாவிக்கின்ற அணைத்து நண்பர்களும் புறக்கணிக்குமாறும்இம் லைக் செய்ய வேண்டாம் எனவும் முக நூல் நண்பர்களை கேட்டுக்கொண்டார். அத்தோடு சாட்டோ மன்சூர் இவ்வாறான விடயங்களில் ஈடுபடுகின்ற பொழுது அல்லாஹ்வினை பயந்து நடந்துகொள்ளுமாறும் சாட்டோ மன்சூரினை கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் எனது அரசியலில் சாட்டோ மன்சூரினை அரவணைத்து அவரை நல்வழிப்படுத்தியே நடந்து வந்த்துள்ளேன். ஆனால் சொற்ப நாற்களாக வாழைச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்தி செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதினாலும் அவர்களுக்கு சந்தை கட்டிட தொகுதி மற்றும் காணி பிரச்சனைகள் இருப்பதினால் அந்த மக்களுடனே அதிகமான நேரத்தினை செலவு செய்ய வேண்டி எனக்கு ஏற்பட்டிருந்தது. இதனை பொறுத்துகொள்ளாத சாட்டோ மன்சூர் இவ்வாறான கீழ்தரமான செயல்களில் ஈடுபடுகின்றார் என சந்தேகிக்கின்றோம்.

இக்குற்றச்சாட்டனது முழுமையாக சாட்டோ மன்சூர்தான் என நிருபிக்கப்படுமிடத்தில் மன்சூரினை கட்சியிலிருந்தும் கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்தி குழுவிலிருந்தும் நீக்குவதற்கு உடனடி நடவடிக்கையினை மேற்கொள்வேன் என தெரிவித்தார் உயர் பீட உறுப்பினர் றியால்.
உயர் பீட உறுப்பினர் கணக்கறிஞர் றியால் தொலை பேசியில் குறித்த விடயம் சம்பந்தமாக தெரிவித்த குற்றச்சாட்டுடனான கருத்துக்களின் காணொளி எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
எனது பெயரில் சாட்டோ மன்சூர் இயக்கும் போலியான முகநூலில் பாலியல் வீடியோ கணக்கறிஞர் றியால்.. எனது பெயரில் சாட்டோ மன்சூர் இயக்கும் போலியான முகநூலில் பாலியல் வீடியோ கணக்கறிஞர் றியால்.. Reviewed by Madawala News on 8/30/2016 05:47:00 PM Rating: 5