அரச சொகுசு வாகனத்தை நிராகரித்த கோப் குழு தலைவர் ...


கோப் குழுவின் தலைவருக்கு சொகுசு வாகனம் கொள்வனவு செய்ய அரசினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிதியில் சொகுசு வாகனம் கொள்வனவு செய்வதை கோப் குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன் நெத்தி நிராகரித்துள்ளார்.

கோப் குழு தலைவருக்கான வாகனம் கொள்வனவு செய்ய 45 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினருக்காக மக்கள் விடுதலை முன்னணி கட்சியால் வழங்கப்பட்டுள்ள வாகனம் தனக்கு போதுமானது என அவர் அறிவித்துள்ளார்.
அரச சொகுசு வாகனத்தை நிராகரித்த கோப் குழு தலைவர் ... அரச சொகுசு வாகனத்தை நிராகரித்த கோப் குழு தலைவர் ... Reviewed by Madawala News on 8/14/2016 03:55:00 PM Rating: 5