Free Space

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வெள்ள நிவாரண உதவிகள் கையளிக்கப்பட்டன...



16.05.2016 ஆம் திகதி அன்று திங்கட் கிழமை கொழும்பிலும் நாட்டின் ஏனைய இடங்களிலும் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏனைய இஸ்லாமிய நலன்புரி சங்கங்களுடன் இணைந்து பல முயற்சிகளை மேற்கொண்டது.
 
ஆரம்ப கட்டமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல பல முயற்சிகளை ஜம்இய்யா மேற்கொண்டதோடு அவர்களுக்கான சாப்பாட்டுக்குரிய ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது. அடுத்து பாதிப்புக்குள்ளானவர்கள் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்காக அவர்களின் வீடுகளை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளை ஜம்இய்யா செய்து கொடுத்ததுடன் அவர்களுக்கு உலர் உணவு வழங்கவும் ஏற்பாடுகளை செய்து கொடுத்தது. அத்தோடு சென்ற ரமழான் மாதத்தை முன்னிட்டு அவர்களின் செலவினங்களுக்காக குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தையும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கியது.
 
குறிப்பாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தமது வேலைக்கு திரும்பிச் செல்வதற்காக back to school என்ற வேலைத் திட்டத்தில் தேவையான ஆடைகளை ஏற்பாடு செய்து கொடுத்தது. 

அத்தோடு என்ற வேலைத் திட்டத்தில் என்ற நிறுவனத்துடன் இணைந்து பொதுவாக கொழும்புப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகங்களும் வழங்கப்பட்டது.
 
தொடர்ச்சியாக back to work என்ற வேலைத் திட்டத்தில் சிறு தொழில் செய்வோர்களுக்கும் பழுதடைந்த ஆட்டோ ஓட்டுனர்களின் ஆட்டோக்களை சரி செய்து கொள்வதற்குமாக சுமார் 143 நபர்களுக்கு இத் திட்டத்தை நடைமுறைபடுத்தும் வகையில் ரூபா 3,851,820.00 பணம் ஒதுக்கப்பட்டு முஸ்லிம் எய்ட் என்ற நிறுவனத்திற்கு இன்று 2016-08-18 ஆம் திகதி வியாழக்கிழமை ஜம்இய்யாவின் தலைமையகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
 
இப் பணத்திற்குரிய காசோலையை ஜம்இய்யாவின் கௌரவ தலைவர்; அஷ்-ஷைக் முப்தி எம்.ஜ.எம். ரிழ்வி மற்றும் ஜம்இய்யாவின் சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர் மற்றும் சமூக சேவைப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ் ஆகியோர் இணைந்து முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் அப்துல் காதர் பைஸர்கான் மற்றும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் மொஹம்மட் அஸ்மி அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வெள்ள நிவாரண உதவிகள் கையளிக்கப்பட்டன... அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வெள்ள நிவாரண உதவிகள் கையளிக்கப்பட்டன... Reviewed by Madawala News on 8/18/2016 06:41:00 PM Rating: 5