Accaddemy

முன்பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்படும் கல்வியே போதைப் பொருளுக்கு எதிரான சிறந்த ஆயுதம்..


முன்பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்படும் கல்வியே ஹோரொயின் போதைப் பொருளுக்கு எதிரான சிறந்த ஆயுதம். எனவே, கடந்த காலத்தில் கவனிக்காது விடப்பட்டிருந்த கொலொன்னாவை பிரதேச கல்வி நடவடிக்கைகளை நான் அபிவிருத்தி செய்வேன், என பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.எம்.மரிக்கார் அவர்கள் குறிப்பிட்டார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50 முன்பள்ளிகளுக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் தலையீட்டுடன் யுனிசெப் நிறுவன உதவியின் கீழ் வழங்கப்பட்ட ரூ.10 மில்லியன் பெறுமதியான பூரண பௌதீக உபகரணத் தொகுதிகளை கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சந்திராணி பண்டார அவர்களும் கலந்துகொண்டு இவ்வைபவத்தை சிறப்பித்தார்.

அங்கு மேலும் கருத்த தெரிவித்த உறுப்பினர், தற்பொழுது இனங்காணப்பட்டுள்ள தரவுகளின்படி கொழும்பு மாவட்டத்தில் உள்ள பினதங்கிய கல்வி வலயம் கொலொன்னாவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு 9 'A சித்திகளைக் கொண்ட 10 பிள்ளைகளை காண முடியாது. அதேபோல் பலகலைகழகத்திற்கு தெரிவான 10 பேரை காண்பதுவும் கடினம். சமூகத்தை பாழ்படுத்தியிருந்தால் மாத்திரமே தங்களது வியாபாரங்கள் மற்றும் ஹொரோயின் போதைப்பொருள் வியாபரம் ஆகியவைகளை அபிவிருத்தி  செய்து கொள்ள வசதியாக இருக்கும்.

ஆகவே, கடந்த காலத்தில் இங்கிருந்த அரசியல்வாதிகளால் கல்வி அபிவிருத்தி செய்யப்படவில்லை. ஓரு பாடசாலையிலாவது அதன் பௌதீக வளங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. கொலொன்னாவையில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரிய பற்றாக்குறை காணப்படுகிறது.  ஆகவே முன்பள்ளியிலிருந்தே கவனிக்காது விடப்பட்டிருந்த கல்வியை அபிவிருத்தி செய்வது எமது பாரிய பொறுப்பாகும்.

உட்கட்டமைப்பு வசதிகள் 5 வருடங்களில் பழைமையடைந்துவிடும்;;;;. ஆனால், கல்வி பழைமையடைவதில்லை. எதிர்காலத்தில் தாய்மார்கள் தங்களது பிள்ளைகள் தொடர்பாக பீதியுடன் நடவடிக்கை மேற்கொள்வதற்கான அவசியமேற்படாத வகையிலேயே நாம் கல்வியை அபிருத்தி செய்வோம். இவ்விடயத்தில் ஆரம்ப பிள்ளை பருவத்தை அபிவிருத்தி செய்பவர்கள் எனும் வகையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பாரிய பொறுப்புண்டு. இங்கு வரும் ஒவ்வொரு பிள்ளையையும் தன்னுடைய குழந்தையாக நினைத்து கொலொன்னாவை பிள்ளைகளின் எதிர்காலத்தை தயார் செய்யும் பாரிய பொறுப்பு இவர்களது கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலொன்னாவையிலிருந்து கல்வியாளர்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள் மற்றும் விiயாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உருவாக வேண்டும்.  முன்பள்ளியே அதற்கான ஆரம்ப அடித்தளமாக அமைந்துள்ளது. எனவே பாடசாலைக்கு செல்வதற்கு தேவைப்படும் அடிப்படைத் தகைமைகளை அபிவிருத்தி செய்யும் பாரிய பொறுப்பு முன்பள்ளி ஆசிரியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. எங்களது கடமைகளை நேர்மையாக நிறைவேற்றுவதற்கு எங்களிடம் துணிவு இருக்க வேண்டும். தொழிலுக்கு மற்றும் கொடுப்பனவுகளுக்கு அப்பால் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பது எங்களது கடமையாகவும் மற்றும் பொறுப்பாகவும் அமைந்துள்ளது.
முன்பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்படும் கல்வியே போதைப் பொருளுக்கு எதிரான சிறந்த ஆயுதம்.. முன்பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்படும் கல்வியே  போதைப் பொருளுக்கு எதிரான சிறந்த ஆயுதம்.. Reviewed by Madawala News on 8/12/2016 03:55:00 PM Rating: 5