Free Space

ஐரோப்பாவில் கைதாவதை தவிர்க்க உயர்ஸ்தாணிகர் ஊடாக இத்தாலி பிரதமருடன் பேச மஹிந்த திட்டம் ....


எதிர்வரும் வாரம் ஐரோப்பாவிற்க்கு முன்னாள் ஜனாதிபதி செல்லவுள்ள நிலையில் அவர் அங்கு கைது செய்யப்படுவார் என ஊடக தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் 

நாளை அல்லது நாளை மறுதினம் முன்னாள் ஜனாதிபதி இலங்கைக்கான இத்தாலி உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன.

இத்தாலி உயர்ஸ்தானிகரை முன்னாள் ஜனாதிபதி சந்தித்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இத்தாலி பிரதமருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு இலங்கை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இங்கிலாந்து நீதிமன்றில் மஹிந்த ராஜபக்‌ஷ மீது வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அவர் முன்னதாக இங்கிலாந்து விஜயம் செய்தபோது அவரை கைது செய்ய ஸ்கொட்லாந்து பொலிஸார் திட்டமிட்ட போதும் அப்போது மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் நாட்டின் அரச தலைவராக இருந்ததால் அவர் கைது செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் நாளை அல்லது நாளைமறுதினங்களில் இத்தாலி தரப்பில் இருந்து கிடைக்கும் பதிலை பொருத்து முன்னாள் ஜனாதிபதியின் இத்தாலி பயணம் தொடர்பில் தீர்மானிக்கப்படுமென தெரிகிறது.
ஐரோப்பாவில் கைதாவதை தவிர்க்க உயர்ஸ்தாணிகர் ஊடாக இத்தாலி பிரதமருடன் பேச மஹிந்த திட்டம் .... ஐரோப்பாவில்  கைதாவதை தவிர்க்க  உயர்ஸ்தாணிகர் ஊடாக இத்தாலி பிரதமருடன் பேச மஹிந்த திட்டம் .... Reviewed by Madawala News on 8/29/2016 08:40:00 PM Rating: 5