'சிறு காயங்களுக்கு வருந்துகிறோம்'.. போலீஸ் அயோக்கிய அறிக்கை.



-ஹைதர் அலி-

32 நாட்களில் 13 லட்சம் பெல்லட்டு குண்டுகளை பயன்படுத்தி உள்ளோம், காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் சிஆர்பிஎப் ஒப்புதல் செய்துள்ளது.


காஷ்மீரில் பால் வாங்கவோ, மருந்து வாங்கவோ, வீட்டில் விளையாடவோ, சமையல் அறையில் சமையல் செய்து கொண்டோ இருந்தாலும் மத்திய போலீசின் குண்டுகள் யாரையும் விட்டு வைக்கவில்லை.

சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், முதியவர்கள் என்று முழு சமூகமே அங்கு கண்களை இழந்தோ காயம் பட்டோ, இல்லை காயமடைந்தவர்களை காப்பாற்ற முடியாமலோ தேசமே அழுது கொண்டிருக்கிறது.

இருப்பினும் இந்த கொலைக் குற்றத்தை அதாவது 2,012 முறை பெல்லட் துப்பாக்கிகளால் சுட்ட ( கிட்டத்தட்ட 13 இலட்சம் சிறு குண்டுகள் ) மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைவர் ஒரு வரியில் சிறு காயங்களுக்கு வருந்துகிறோம் என்று அயோக்கியத்தனமாக முடித்திருக்கிறார்.
'சிறு காயங்களுக்கு வருந்துகிறோம்'.. போலீஸ் அயோக்கிய அறிக்கை. 'சிறு காயங்களுக்கு வருந்துகிறோம்'.. போலீஸ் அயோக்கிய அறிக்கை. Reviewed by Madawala News on 8/20/2016 10:18:00 AM Rating: 5