Free Space

இலங்கை மத்திய வங்கி மீது புதிய சர்ச்சை ...


இலங்கை மத்திய வங்கி அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இரு கட்டிடங்களை கொள்வனவு செய்து அந்த கட்டடங்களை வாடகைக்கு வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் ...

இலங்கை மத்திய வங்கி அமெரிக்காவில் 900 மில்லியன் செலவில் கட்டம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளது பிரேசிலில்  122 மில்லியன் செலவில் கட்ட்டம் ஒன்றை கொள்வனவு செய்து அந்த கட்டடங்களை வாடகைக்கு வழங்கியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வாடகைக்கு வீடு வழங்கும் நிறுவனமா? அல்லது கட்டடம் வாடகைக்கு வழங்கும் நிறுவனமா? என்ற கேள்வி எமக்கு எழுகிறது.

அரச நிதியை கையாள்வதில் பிரதான  அதிகாரம் உள்ள இலங்கை மத்திய வங்கிக்கு வியாபாரம் செய்ய சட்டத்தில் அனுமதி வழங்கப்படவில்லை.இவ்வாரான நிலையில் மத்திய வங்கி யாரின் தேவைக்காக கட்டடம் கொள்வனவு செய்து யாரின் தேவைக்காக அதனை வாடகைக்கு விட்டுள்ளது .என கேள்வி எழுப்பினார்.

இலங்கை மத்திய வங்கி மீது புதிய சர்ச்சை ... இலங்கை மத்திய வங்கி மீது புதிய சர்ச்சை ... Reviewed by Madawala News on 8/18/2016 10:23:00 PM Rating: 5