Kidny

Kidny

உலக முஸ்லிம்களின் ஆரம்பத் தாய் வீடு சவூதி அரேபியா
இன நல்லுறவுக்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவர் அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்களின் தலைமையில் உலக முஸ்லீம்  லீக் பொதுச் செயலாளர் கலாநிதி அப்துல்லாஹ் பின் அல் முஹ்ஸின் அல் துர்க்கி அவர்களுடனான ஊடகவியலாளர் சந்திப்பும் விருந்துபசாரமும் இன்று  ஜும்ஆ  தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெறது.  

இதில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ், இலங்கை வெளி விவகார அமைச்சின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான செயலாளர் நாயகம் அல்ஹாஜ்.ஓ.எல்.எம்.அமீர் அஜ்வாத் மற்றும்  சவூதி அரேபியா தூதுவரலாயத்தின் பிரதிநிதிகள், ஜாமியா நளீமியா கலாபீடத்தின் உப தலைவர் அஷ்ஷெய்க். அஹார் முஹம்மத் உட்பட 
உலமாக்கள் ,புத்திஜீவிகள்,கல்விமான்கள்ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து  சிறப்பித்தனர்.

நிகழ்வின் தொடக்கவுரையை இன நல்லுறவுக்கான தேசிய வேளைத் திட்டத்தின் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா நிகழ்த்த, சிறப்புரையை உலக முஸ்லீம் லீக்கின் பொதுச் செயலாளர் கலாநிதி அப்துல்லாஹ் பின் அல் முஹ்ஸின் அல் துர்க்கி அவர்கள் நிகழ்த்தினார். முஸ்லிம்களின் இன நல்லுறவு சகவாழ்வு குறித்த விடயங்களின் முக்கியத்துவம் பற்றி அவரது உரை அமைந்தது.


உலக முஸ்லிம் லீக் அமைப்பு ஏற்பாடு செய்த சர்வதேச இஸ்லாமிய மாநாடு  ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெற்றது. இந்த மாநாட்டை கண்காணிக்கவென  உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் கலாநிதி அப்துல்லாஹ் முஷின் அப்துல் அல் துர்கி அவர்கள் கலந்து கொண்டமை உங்களுக்குத் தெரியும்.உலக முஸ்லீம் லீக் செயலாளர் அவர்களின் இலங்கை விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர்களின் வருகை குறித்து நாம் பேருவகை அடைகின்றோம்.

இந்த மாநாட்டில் சவூதி அரேபியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தியா, தாய்வான், நேபால், கம்போடியா, மியன்மார், சீனா மற்றும் உள்நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்று ‘முஸ்லிம்களும் சகவாழ்வின் சுபீட்சமும்’ என்ற தலைப்பில் உரையாடினர்.

மேற்படி மாநாட்டில் சீன பௌத்த சங்கத்தின் உப தலைவர் வென் ஸு சாங் கலந்துகொண்டு, ‘முரண்பாட்டு நாகரிகத்திலிருந்து பங்காளித்துவம்’ என்ற தலைப்பில் உரையாற்றியமை விசேட அம்சமாகும்.

உலக முஸ்லிம் லீக் சவூதி  அரேபியாவை தளமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச அமைப்பொன்றாகும். அந்த அமைப்பு வன்முறையைத் தூண்டும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதுடன் ஏனைய கலாசாரங்களைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஊக்குவித்து வருகின்றது.

இஸ்லாத்தின் பரம விரோதிகளான யூதர்கள்,ஷியாக்கள்,ஐ.எஸ். அமைப்பினரின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சவூதி அரசாங்கம் உலக முஸ்லிம்கள் விடயத்தில் மிகுந்த அவதானமாக இருந்து, முஸ்லீம் உம்மாவின் ஒற்றுமைக் கரங்களை பலப்படுத்துவதில் பாரிய பங்காற்றி வருவது வரவேற்கத்தக்கதாகும். 

குறிப்பாக, சவூதி அரசும் மன்னர் சல்மான் அவர்கள் உள்ளிட்ட   அரச நிர்வாகமும் உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத அனைத்து மக்களுக்கும் பாரியளவிலான உதவிகளைச் செய்து வருவது கண்கூடு. யுத்தம்,இயற்கை அனர்த்தம்,மனிதாபிமான உதவிகள்,கடன் சலுகைகள்,இதர செயற்பாடுகள் என சவூதி இலங்கை உள்ளிட்ட சகல நாடுகளுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

இஸ்லாத்தின் அற நெறிகளை,மனித விழுமியங்களை சவூதி அரசு மிக கண்ணியத்துடன் கடைப்பிடித்து வருகிறது. உலக முஸ்லிம்களின் தாய் வீடாக சவூதியை முஸ்லிம்கள்  விரும்புகிறார்கள். இலங்கை மக்களும் சவூதி அரேபியாவின் மீது மிகுந்த நேசம் கொண்டிருப்பது எமக்குத் தெரியும். 

முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் எம்.எச்.முஹம்மத் அவர்கள் சவூதியை தலைமையகமாய்க் கொண்ட உலக முஸ்லிம் லீக் அமைப்பினருடன் இலங்கைக்கான உறவுப் பாலத்தை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றியது இவ்விடத்தில் நினைவு கூறாத தக்கதாகும். தற்போது அவரது புதல்வரும் முன்னை நாள் சவூதி அரேபியாவிற்கான தூதுவருமான  அல்ஹாஜ்.ஹுசைன் முஹம்மத்  இவ்விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்படுவது எமக்கு மகிழ்ச்சியை தருகிறது.
 

இந்த அன்பு தொடர வேண்டும். சவூதி அரசும் மக்களும் என்றும் நேசிக்கின்ற தேசமாக நாம் இருக்க வேண்டும். எமது முஸ்லீம் அரசியல்வாதிகளும் இதில் கூடிய கரிசனை செலுத்துவது அவசியமாகும். 


ஊடகப் பிரிவு

அஷ்ஷெய்க்.அப்துல் காதர் மசூர் மௌலானா 
சமூக சிந்தனையாளர் 
தலைவர்,இன நல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டம் 
உலக முஸ்லிம்களின் ஆரம்பத் தாய் வீடு சவூதி அரேபியா உலக முஸ்லிம்களின் ஆரம்பத் தாய் வீடு சவூதி அரேபியா Reviewed by Madawala News on 8/12/2016 07:56:00 PM Rating: 5