Wednesday, August 3, 2016

கொலன்னாவை அமைப்பாளர் ஒரு முஸ்லீம் என்பதே இனவாதிகளுக்கு பெரிய பிரச்சினை...

Published by Madawala News on Wednesday, August 3, 2016  | விசேடமாக பெரிய கருத்திட்டங்கள் இரண்டை மாத்திரம் கொலொன்னாவைக்கு கொண்டு வரவேண்டியுள்ளதாகவும் அவர் பலாத்கரரமாக இங்கு கொண்டு வந்து போடப்பட்டுள்ள குப்பையை இங்கிருந்து அகற்றுவதும், தாழ் நில பாதையை அபிவிருத்தி செய்யவதுமாகும் என பாரளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார்.

அம்பத்தளை-ஒருகொடவத்தை (லோ லெவல் ரோட்) பாதை அபிவிருத்தியின் நான்காவது கட்டத்திற்கான நட்டஈடு வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு கூறினார். நட்டஈட்டு உரிமை கோருனர்கள் 190 பேருக்கு ரூ.300 மில்லியன் பகிர்ந்து வழங்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போது இதனை அவர் குறிப்பிட்டார்.


அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்...

தெஹிவலை, மொரட்டுவை, கடுவெலை மற்றும் கோட்டை பகுதியில் காணி பர்ச்சஸ் ஒன்றின் விலையை கொலொன்னாவை பகுதியின் காணி ஒரு பர்ச்சஸ் ஒன்றின் விலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கொலொன்னாவையின் அபிவிருத்தி எந்தளவு என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இப் பாதையை 4 ஒழுங்கைகள் கொண்ட சுப்பர் மட்ட பாதையொன்றாக அபிவிருத்தி செய்யும்போது ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் அபிவிருத்தி அடையும். இதன் பெறுபேறாக தொழிற்சாலைகள் மற்றும் முதலீட்டாளர்கள் இங்கு வருவார்கள். இதனுடன் இணைந்தாற்போல் தொழில் வாய்ப்புக்கள் உருவாகும்.பணப்புழக்கம் அதிகரிக்கும். இறுதியாக தனிநபர் வருமானம் அதிகரித்து பொது மக்களுடைய வாழ்க்கை அபிவிருத்தி அடைய ஆரம்பிக்கும். நாங்கள் அபிவிருத்தியை அதற்குரிய இடத்திற்கு கொண்டு செல்வோம். ராஜபக்ஸ யுகத்தில் இருந்த தூள் அங்கத்தினரால் செய்திட முடியாததை நான் செய்வேன்.

கொலொன்னாவையில் இதுகாலவரை ஏதாகிலும் அபிவிருத்தி நடைபெறாததால் தான் ஒன்றிணைந்த எதிர்க்ட்சி அவர்களுடைய சுவரொட்டிகளில் பாதயாத்திரையில் கலந்து கொள்ள கொலொன்னாவை சந்திக்கு வருமாறு பொதுமக்களுக்கு அழைப்ப விடுத்துள்ளனர். 

தொடர்ந்தும் கொலொன்னாவையை ஒரு சந்தியாக வைத்துக் கொள்ளவே இவர்களுக்கு தேவைப்பட்டுள்ளது.மஹிந்த அவர்களின் காலத்தில் கொலோன்னாவையில் ஒரு பாதையேனும் அமைக்கப்படவில்லை. 

பாடசாலையான்றேனும் அமைக்கப்படவில்லை. ஒரு வடிகான் வசதியேனும் அமைக்கப்படவில்லை. ஒரு அணை கட்டேனும் கட்டப்படவில்லை. இதற்கு பதிலாக தூளையும் குப்பையையும் கொண்டு வந்து கொட்டினார்கள். 

அதேபோன்று, பாதாள உலகக் கோஷ்டியினரை கொண்டு கொலொன்னாவையை சுடுகாடாக்கினார்கள். இந்நிலையயை மாற்றுவதே எமது தற்போதைய தேவைப்பாடாகும். இப்பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எனும் முறையில் எந்த பிரச்சினை வந்தாலும், எவ்வித தடைகள் ஏற்படினும் நாங்கள் ஆக்கரீதியானவர்களாக, திறமையானவர்களாக இருப்பின் எங்களது எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றியவர்களாக அவைகளை வெற்றி கொள்ள முடியும். பிரதமர் அவர்களை சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒன்றோ நான் குப்பை மேட்டை பற்றி கதைப்பேன் அல்லது பாதைகளை பற்றி இல்லாவிட்டால் கொலொன்னாவையில் உள்ள பாடசாலைகளுக்கு பணம் வழங்கமாறு கோருவேன். 

கொலொன்னாவையுடன் உறவுமுறையை கொண்டுள்ள எங்களது பிரதமரின்றி இவைகளை சாதிக்க முடியாது. இவைகளை செய்யும் போது பல பிரச்சினைகளுக்கும் தடைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியேற்படும். எனது கைகள் இரண்டும் தூய்மையானவைகள். ஆதலால், என்னை தூள்காரன், கள்வன் அல்லது கொலைகாரன் என்று எவராலும் சுட்டிக் காட்ட முடியாது.  என்மீது சுமத்தும் ஒரே ஒரு குற்றச்சாட்டு நான் ஒரு முஸ்லிம் என்பதுதான்.நான் சிறந்ததொரு இலங்கையன்.அது மாத்திரமல்ல சிங்களத்தை தாய்மொழியாகக் கொண்டு, சிங்களத்தில் கற்றுத் தேர்ந்து சிங்களவர்களோடு  வாழும் நான் பிறந்தது இலங்கையன் ஒருவனாகத்தான்.நான் மரணிப்பதுவும் இலங்கையன் ஒருவனாகத்தான்.    


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top