Oceas

இன்னுமொரு அளுத்கம கலவரம் இடம்பெற ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்...


(அஷ்ரப் ஏ சமத்)
லங்காதீப டெயிலி மிரர் ஆகிய பத்திரிகைகளை வெளியிடும் விஜயா வெளியீடுட்டு நிறுவன  தலைவரும்   பியகம மல்வானை பிரதேசத்தினை பிரநிதித்துவப்படுத்தும் ஜ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினரும்  பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருமான ருவான் விஜயவர்த்தன தேசிய ஜக்கிய  அமைப்பினால் கௌரவிக்கும் நிகழ்வு அவ் அமைப்பின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் வெள்ளவத்தை எக்சலன்சி ஹோட்டலில் நேற்று இரவு (5) நடைபெற்றது.  

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி ஜனாதிபதி சட்டத்தரணி  தற்போதைய இராஜாங்க அமைச்சின் செயலாளார் எம்.என் சுகைர்  ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன் இந்த நாட்டில் முஸ்லீம்களது  சில பிரச்சினைகள் இரஜாங்க அமைச்சருக்கு எத்திவைக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன உரையாற்றுகையில் 

இந்த நாட்டில் பயங்கரவாத சக்திகலோ அல்லது விடுதலைப்புலிகளோ  மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளினால் இந்த நாட்டில் வாழ்ந்த சகல சமுககங்களும் உயிர் உடைமைகள் இழந்து துண்டாடப்பட்டார்கள். 

காத்தாண்குடி பள்ளிவாயல் அருந்தலாவ பிக்குகள் , வெள்ளவத்தை சென்ஆண் தேவாலயம் போன்ற மத ஸ்தானங்களின் விடுதலைப்புலிகள் தாககுதல்களை நினைவுபடுத்தி பேசினார் அத்துடன் அளுத்கம போன்றதொரு இன்னொரு நிகழ்வு இந்த நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழமாட்டாது.அதற்காக பாதுகாப்பு பிரிவு மிக அவதாணமாக நடந்து கொள்ளும்.இந்த நாட்டில் மத ரீதியாகவோ வேறு சக்திகள் இந்த நாட்டிக்குள் வந்து பயிற்சியோ அல்லது இங்கு நிலைகொள்ள எமது பாதுகாப்பு படைகள் உசார் நிலையில் உள்ளது.

இதற்காக மதத் தலைவர்கள் கண்னும் கருத்துமாகவும் பாதுகாப்புப்பிரிவோடு தொடர்பாகவும் இருத்தல் வேண்டும். இந்த நாட்டுக்குள் எதிர்காலத்தில் உள்ள இளம் சந்ததியினர் மீள விடுதலைப்புலிகள்  உயுர்பெற இடமளிக்காது.இந்த நாட்டில் புதிய ஆட்சி ஜனாதிபதி மைத்திரி பிரதமர் ரணில் தலைமையிலான ஆட்சி மலர்ந்துள்ளது.இவர்களது புதிய ஆட்சியில் சகல சமுகங்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் , அவர்கள் சகல உரிமைகளை அனுபவிக்க உரிமை உண்டு. அதன் படியே சட்டம் ஓழுங்கு சகலருக்கு சமம். அத்துடன் நாம் தற்காலிகமாக சமதானாத்தைப் பெற்றாலும் இன்னும் வட கிழக்கில் நல்லிணக்கம் ஏற்படவில்லை. 

அதனை ஏற்படுத்தி  முழுமையாக நம் நாட்டில் நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்தி சகல சமுகங்களும் ஒரே கொடியின் கீழ் இலங்கையர் என்ற உணர் வுடன் வாழ்வதற்கு நாம் வழிவகுக்க வேண்டும்.அத்துடன் எமது பாதுகாப்பு படையினர் நல்லிணக்க விடயங்களில் விட்டுக்கொடுத்து  சட்டம் ஓழுங்கை பொலிசார் இணைந்து செயல்படுத்த உள்ளனர் என இராஜாங்க அமைச்சர் ருவான்  விஜயவர்த்தன  அங்கு உரையாற்றினார் 

இன்னுமொரு அளுத்கம கலவரம் இடம்பெற ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்... இன்னுமொரு அளுத்கம கலவரம் இடம்பெற ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்... Reviewed by Madawala News on 8/06/2016 08:29:00 AM Rating: 5