Free Space

ஐயூப் அஸ்மின் மீது யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் குற்றச்சாட்டு


பாறுக் ஷிஹான்
ஐயூப் அஸ்மின் தனக்கெதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட  எதிர்ப்பு  நடவடிக்கை' குறித்து ஊடகங்களில்  பிழையான கருத்தொன்றினை பரப்பி மக்களை திசைதிருப்ப முயற்சிப்பதாக 
யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு இவ்வாறு தனது ஊடக அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் 2016.08.27ம் திகதி யாழ் ஐந்து சந்தி பகிஸ்கரிப்பு நடவடிக்கையினை 'பள்ளிவாசல்களின் சம்மேளனம்' மேற்கொள்ளவில்லை 'யாழ் முஸ்லிம் சமூகமே' மேற்கொண்டது.

2016.08.27ம் திகதி மேற்படி பகிஸ்கரிப்பு நடவடிக்கையினை தொடர்ந்து வடமாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்கள் 'பள்ளிவாசல்களின் சம்மேளனம் மேற்கொண்ட பகிஸ்கரிப்பு நடவடிக்கை' என்று பிழையான கருத்தொன்றினை  ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்

அதன் உண்மை நிலையினை மக்களுக்கு தெளிவுபடுத்தவே இவ்விளக்கம் வெளியிடப்படுகின்றது.

2016.08.26ம் திகதி யாழ் மன்ப உல் உலும் மதரஸா மண்டபத்தில் கூட்டத்தினை யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன நிர்வாகசபையே ஏற்பாடு செய்திருந்ததுஇ சில முக்கிய தீர்மாணங்கள் எடுக்கப்படவேண்டி இருந்ததனால் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன அங்கத்தவர்களும்இ பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்களும்இ சமூக ஆர்வலர்களும் அக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். 

அக்கூட்டத்தில் ஆறு அம்சங்கள் கலந்துரையாடலுக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தனஇ அவ் ஆறு அம்சங்களுள் 2016.08.27ம் திகதி யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற இருக்கும் 'யாழ் கிளிநொச்சி முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான விஷேட திட்டமிடல் அமர்வும்' ஒன்றாகும்.

மேற்படி திட்டமிடல் அமர்வின் சாதக பாதக விளைவுகள்இ அமர்விற்கான ஒழுங்குமுறையற்ற அழைப்பிதழ்கள் கையளிப்புஇ 'யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தை' அதன் கொள்கையில் இருந்து ஓரங்கட்டுவதற்கான முயற்சி போன்ற பல்வேறு பிரைச்சனைகளும் ஆராயப்பட்டுஇ கூட்டத்திற்கு வருகைதந்த அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே மேற்படி பகிஸ்கரிப்பு நடவடிக்கை தீர்மானமாகும்.

எனவே மேற்படி பகிஸ்கரிப்பானது யாழ் பள்ளிவாசல் நிர்வாகசபைகள்இ யாழ் முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் இ யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துளைப்பிலும் யாழ் முஸ்லிம் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்டது என்பதனை தெளிவுபடுத்துகின்றோம். 

நன்ற
இவ்வண்ணம்{ பொதுச்செயலாளர் - RK சுவர்கஹான் JKMF}

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐயூப் அஸ்மின் மீது யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் குற்றச்சாட்டு ஐயூப் அஸ்மின் மீது யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் குற்றச்சாட்டு Reviewed by Madawala News on 8/30/2016 10:10:00 AM Rating: 5