கூட்டு எதிர்கட்சி கூட்டத்துக்காக இலங்கை கூட்டுறவு திணைக்கள பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு பூட்டு !


கடந்த 28 ம் திகதி கண்டியில் இருந்து 
கொழும்பு நோக்கி சென்ற கூட்டு எதிர்கட்சியின் பாத்யாத்திரை 29 ம் திகதி நெலும்தெனியவை வந்தடைந்த நிலையில் அன்று இரவு நெலுந்தெனிய நகரில் கூட்டு எதிர்கட்சி கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த கூட்டம் நெலுந்தெனியவில் அமைந்துள்ள இலங்கை கூட்டுறவு திணைக்களத்துக்கு சொந்தமான பெற்றோல் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்துக்காக இலங்கை கூட்டுறவு திணைக்களத்துக்கு சொந்தமான பெற்றோல் நிரப்பு நிலையம் மாலை 5 மணி முதல் 8.30 மணிவரை  மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் பிரதேசமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கூட்டு எதிர்கட்சி கூட்டத்துக்காக இலங்கை கூட்டுறவு திணைக்கள பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு பூட்டு ! கூட்டு எதிர்கட்சி கூட்டத்துக்காக  இலங்கை கூட்டுறவு திணைக்கள  பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு பூட்டு ! Reviewed by Madawala News on 8/04/2016 03:25:00 PM Rating: 5