அரிசிமலை விவகாரம் கிழக்கு மாகாண சபையால் கிழக்கு போலீஸ் மா பிரதி அதிபருக்கு கடிதம் ...


புல்மோடடை அரிசிமாலை பிரதேசத்தில் கடந்த 12.08.2016 ம் திகதி புல்மோடடை அரிசிமலை பௌத்த பிக்கு  பானா முற திலக  வன்ஸ வின் உதவியுடன் கொழும்பில் இருந்து புல்மோடடை அரிசிமலை பகுதியில் அமைந்துள்ள ஜகுபர் காலித்  என்பவரின் வீட்டிற்க்கு  விஜயம் மேற்கொண்டு தாக்கியமை தொடர்பாக 12.08.2016 புல்மோட்டை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றரை குறித்த அரிசிமலை பௌத்த பிக்குவிற்கு  எதிராக கொடுத்திருந்தார் ஆனால் இற்றை வரைக்கும்  எந்த வித நடவடிக்கையும் இன்றி போலீஸார்  இருப்பது  சட்டம் சரியாக இடம்பெறுகின்றதா என்று கேள்வி எழுப்பியதுடன் குறித்த பௌத்த பிக்குகள் மற்றும் காடையர்கள் அடங்கிய கூட்டம் சட்டவிரோதமாக செயற்பட்டுவிட்டு  புல்மோடடை முஸ்லிம்களை அரிசிமலை பௌத்த விகாரையை  தாக்கினார்கள் அதற்க்கு பின் புலமாக மாகாண சபை  உறுப்பினர்  அன்வர் இயங்கினார் என்று சிங்கள வலை தளங்களில்  போடப்பற்றிருப்பது மன வேதனை அளிப்பதாகவும் கூறியதுடன் 


குறித்த நல்லாட்சி அரசாங்கம் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும் இந்த சபையில் உள்ள சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் மாகாண சபை உறுப்பினர்கள் உண்மை நிலையை  அறிந்து கொள்ளவேண்டும்  மேலும் சட்டத்தை கையில் எடுக்கும் தனி மனிதர்கள் குறித்து  நல்லாட்சி அரசாங்கம்  ஒரு  நெறியான பொறிமுறை ஒன்றை உருவாக்கி  அதனை கையாளவேண்டும்  எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்  மாகாண சபை குழு  தலைவருமான ஆர் .எம் .அன்வர் சபையில்  கேள்வி  எழுப்பினார் 


குறித்த கேள்விக்கு பதில் அளித்த சபை  தவிசாளர் கலப்பதி இது  விடயமாக கிழக்கு மாகாணத்திற்கு  பொறுப்பாகவுள்ள பிரதி போலீஸ் மா அதிபருக்கு சபை தீர்மனமாக  முதல் அமைச்சரும் தானும் இணைந்து நடவடிக்கை குறித்து கடிதம் ஒன்றை அனுப்புவதாக முடிவுகள் எடுக்கப் பட்டன  


(மா.ச .உறுப்பினரின் ஊடகப்பிரிவு )  

அரிசிமலை விவகாரம் கிழக்கு மாகாண சபையால் கிழக்கு போலீஸ் மா பிரதி அதிபருக்கு கடிதம் ... அரிசிமலை விவகாரம் கிழக்கு மாகாண சபையால் கிழக்கு போலீஸ் மா பிரதி அதிபருக்கு கடிதம் ... Reviewed by Madawala News on 8/26/2016 07:22:00 AM Rating: 5