ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன்புரிச் சங்க முயற்சியில் உருவான அல் முனவ்வரா பாடசாலை நூலக திறப்பு விழாவுக்கு அழைப்பு.



ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன்புரிச் சங்கத்தின் முயற்சியில் மடவளை அல் முனவ்வரா ஆரம்பப்பிரிவு பாடசாலையில் சுமார்  23  இலட்சம் ரூபா செலவில் உருவான நூலகம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியுடன் நிறைவு பெற்றுள்ளதுடன் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 13 சனிக்கிழமை காலை 10 மணிக்கு  திறப்பு விழாவுடன் பாடசாலைக்கு இந்த நூலக கட்டிடம் கையளிக்கப்பட உள்ளது..

மடவளையை பிறப்பிடமாகக் கொண்டவரும் , ஜனாதிபதி சட்டத்தரணியாகவும், இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய தூதுவராகவும் கடமையாற்றிய சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்கள் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்க உள்ளார்.

கல்வி அதிகாரிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்ளும், இந்நிகழ்வில் கலந்து கொள்ள அனைத்து ஜமாத்தினரையும் ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன்புரிச் சங்கம் அன்புடன் அழைக்கிறது.

ஜஸாக் அல்லாஹ்

ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன்புரிச் சங்க முயற்சியில் உருவான அல் முனவ்வரா பாடசாலை நூலக திறப்பு விழாவுக்கு அழைப்பு. ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன்புரிச் சங்க முயற்சியில் உருவான அல் முனவ்வரா பாடசாலை நூலக திறப்பு விழாவுக்கு அழைப்பு. Reviewed by Madawala News on 8/11/2016 02:28:00 PM Rating: 5