Free Space

நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு...


நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு
கைத்தொழில் வர்த்தக அமைச்சின் ஏற்பாட்டின் பேரில் சம்மாந்துறைப் பிரதேச ஆசிரியர்களுக்கான நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்று இன்று 08.08.2016 அன்று காலை 10.30 மணிக்கு சம்மாந்துறை விலையாட்டு தொகுதி  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இதில் பிரதம அதிதியாக கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். நுகர்வோர் சமூகத்திடம் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான அறிவை விருத்தி செய்வதற்கான ஒரு செயற்திட்டமாக கௌரவ அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இவ்வாசிரியர்களுக்கான கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அவ்வாசிரியர்கள் மூலம் இவ்வறிவானது மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே இக்கருத்தரங்கின் பிரதான நோக்கமாகும். 

இக்கருத்தரங்கிற்கான அனுசரனையை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு... நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு... Reviewed by Madawala News on 8/08/2016 12:31:00 PM Rating: 5