Free Space

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைகழக கல்விசார ஊழியர்களுக்கு அமைச்சர் கிரியல்லவின் எச்சரிக்கை ...



பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார உழியர்கள் சங்க சம்மேளனத்தினால் கடந்த 2016-07-27 முதல் முன்னெடுக்கப்படும் தொடர் பணிப்பகிஸ்கரிப்பின் காரணமாக பல்கலைக்கழகங்களும் உயர் கல்வி நிறுவனங்களும் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் 2016-08-03 ஆம் திகதியாகிய இன்றும் போராட்டங்கள் தொடரும் நிலையில் இதில் நாடு தழுவிய ரீதியில் 13000 ஊழியர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிலையில் இந்த பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்காதவரகள் பட்டியலில் இணைக்கவேண்டி ஏற்படும் என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்...

பல்கலைக்கழக கல்விசார உழியர்கள் முன்வைத்துள்ள 7 கோரிக்கைகளில் 6 ஐ நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளோம். ஒரு கோரிக்கையை வரவு செலவு திட்டத்தின் பின்னர் நாம் நிறைவேற்றுவதாக    உறுதியளித்துள்ளோம். அதைவிட ஒன்றும் செய்யமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைகழக கல்விசார ஊழியர்களுக்கு அமைச்சர் கிரியல்லவின் எச்சரிக்கை ... போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைகழக கல்விசார ஊழியர்களுக்கு அமைச்சர் கிரியல்லவின் எச்சரிக்கை ... Reviewed by Madawala News on 8/03/2016 05:24:00 PM Rating: 5