காணி உறுதிப்பத்திரங்களை உடன் வழங்கவும்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர் வேண்டுகோள்


(எம்.ஜே.எம்.சஜீத்)

காணி உறுதிப்பத்திரங்களை உடன் வழங்கவும்மாகாண சபை உறுப்பினர் சுபையிர் வேண்டுகோள்

ஏறாவூர் மிச்நகர் கிராம மக்களின் காணிஉறுதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுக்கநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்புமாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் வேண்டுகோள்விடுத்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் (22) திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில்உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபைஉறுப்பினர் மேற்குறித்த வேண்டுகோளை விடுத்தார்.

 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் முன்னாள்பிரதியமைச்சர் மர்ஹும் டாக்டர் பரீட் மீராலெப்பைஅவர்களினால் குடியேற்றப்பட்ட மக்களின் காணிஉறுதிப்பத்திரம் இதுவரைக்கும் வழங்கப்படாமல்இருப்பதனால் அம்மக்கள் ஆவண உறுதிப்படுத்தல்கள்மற்றும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கிவருகின்றனர். 


குறிப்பாக அம்மக்கள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு செலுத்த வேண்டியிருந்த நிலுவைத்தொகையினை கடந்த 2012 ஆம் ஆண்டு அனர்த்தநிவாரண சேவைகள் அமைச்சு மூலம் என்னால்பெற்றுக்கொடுக்கப்பட்டும் இதுவரைக்கும்அம்மக்களுக்கான உறுதிகள் வழங்கப்படவில்லை. எனவே அம்மக்களது காணிஉறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு வேண்டுகோள்விடுத்தார்.


இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில்கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்புஅபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பதிகாரிஉறுதிப்பத்திரங்களை வழங்க மிக விரைவில்நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

 

காணி உறுதிப்பத்திரங்களை உடன் வழங்கவும்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர் வேண்டுகோள் காணி உறுதிப்பத்திரங்களை உடன் வழங்கவும்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர் வேண்டுகோள் Reviewed by Madawala News on 8/23/2016 11:07:00 PM Rating: 5