Accaddemy

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் நடப்பாண்டுத் தலைவராக கலாநிதி ஏ.எம். முஸ்தபா தெரிவு ...


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றாவது நடப்பாண்டின்  தலைவராக கலாநிதி ஏ. எம். முஸ்தபா, இவருடன் போட்டியிட்ட விரிவுரையாளர் ஒருவரை பின்தள்விட்டு பத்து வாக்குகளால் தேர்தல் மூலம் அமோக வெற்றியீட்டிக் கொண்டார். 

கலாநிதி ஏ.எம். முஸ்தபா தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் தனது இளமாணிப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டதுடன்  பேராதனைப் பல்கலைக்கிழக பொருளியல் முதுதத்துவமாணியுமாவார். 

மேலும் இவர் இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடு சுற்றுலாத் துறையில் ஏற்படுத்தும் தாக்கம் எனும் தலைப்பில் தனது ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் பல்வேறு சர்வேதச மற்றும் உள்ளக ஆய்வரங்குகளில் தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துவருவதுடன் இலங்கை பொருளியலாளர் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பிணர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் அப்பல்கலைக்கழத்தின் பழைய மாணவர் ஒருவர் ஆசிரியர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் நடப்பாண்டுத் தலைவராக கலாநிதி ஏ.எம். முஸ்தபா தெரிவு ... தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் நடப்பாண்டுத் தலைவராக கலாநிதி ஏ.எம். முஸ்தபா தெரிவு ... Reviewed by Madawala News on 8/19/2016 08:50:00 AM Rating: 5