Oceas

நெல் வீட்டிற்கு! வைக்கோல் வயலுக்கு!! சம்மாந்துரையில் ஆர்பாட்டம் ...


நெல் வீட்டிற்கு வைக்கோல் வயலுக்கு என்ற தொணிப்பொருளின் கீழ் வைக்கோல் எரிப்பிற்கு எதிரான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை இடம்பெற்றது.

இவ்வார்ப்பாட்டமானது சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அம்பாரை பிரதி விவசாய பணிப்பாளர் காரியாலயம் இதற்கான அனுசரணையை வழங்கி இருந்தது. இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட செயலாளர், சம்மாந்துறை பிரதேச செயலாளர், சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர். 


இதன் போது வைக்கோலை எரித்து சாம்பலாக்குவதை நிறுத்தி அதை ஒரு சேதனப் பசளையாக பயன்படுத்துவதை தூண்டும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் விளம்பரங்களும் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நெல் வீட்டிற்கு! வைக்கோல் வயலுக்கு!! சம்மாந்துரையில் ஆர்பாட்டம் ... நெல் வீட்டிற்கு! வைக்கோல் வயலுக்கு!! சம்மாந்துரையில் ஆர்பாட்டம் ... Reviewed by Madawala News on 8/08/2016 10:34:00 AM Rating: 5