Oceas

இரு தேரர்களுக்கு இடையே கைகலப்பு : ஒருவர் கைது மற்றையவர் வைத்தியசாலையில் ...


ஹம்பாந்தோட்டை குடாஇதிவெவ ரஜமஹா விகாரையின் பிரதம தேரர் மீது கூறிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய அதே விகாரையை சேர்ந்த இன்னொரு தேரரை ஹம்பாந்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இரு தேரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிணக்கு தொடர்பில் கிடைத்த முறைப்பாடு தொடர்பில் ஹம்பந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் விசாரனை இடம்பெற்றுள்ள நிலையில் விசாரனையின் போது பிரதம தேரர் மீது கூறிய ஆயுதம் ஒன்றினால் மற்ற தேரர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் அப்பிரதேசத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு தேரர்களுக்கு இடையே கைகலப்பு : ஒருவர் கைது மற்றையவர் வைத்தியசாலையில் ... இரு தேரர்களுக்கு இடையே கைகலப்பு : ஒருவர் கைது மற்றையவர் வைத்தியசாலையில் ... Reviewed by Madawala News on 8/19/2016 12:41:00 PM Rating: 5