இலங்கை அணி அபார வெற்றி. #வாழ்த்துக்கள் லயன்ஸ்



இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றுவரும் இரண்டாவது போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, குசல் மென்டிஸ் 69, அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் 57, குசல் பெரேரா 54, தினேஷ் சந்திமால் 48 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அடம் ஸாம்பா, ஜேம்ஸ் போக்னர், மிற்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதில், 45.6, 47.1, 47.2 ஓவர்களில் குசல் பெரேரா, அஞ்செலோ மத்தியூஸ், திஸர பெரேரா ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜேம்ஸ் போக்னர் ஹட்-ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய அவுஸ்திரேலிய அணியால் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து -206 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. அதிக பட்சமாக MS Wade யால் 76 ஓட்டங்களை பெற முடிந்தது.

இதனை தொடர்ந்து  இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் இரண்டாம் போட்டியில் முதல்வெற்றியை சுவைத்துள்ளது.
இலங்கை அணி அபார வெற்றி. #வாழ்த்துக்கள் லயன்ஸ் இலங்கை அணி அபார வெற்றி. #வாழ்த்துக்கள் லயன்ஸ் Reviewed by Madawala News on 8/24/2016 09:22:00 PM Rating: 5