Free Space

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடக்கும் ..


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் 
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடக்கும் என்று பாகிஸ்தானில் உள்ள ஹிஸ்புல் முஜாகிதீன்  குழுதலைவர் சையது சலாஹுதீன் மிரட்டல் விடுத்துள்ளார்.

காஷ்மீரில் ஹிஸ்புல்  பர்கான் வானி கொல்லப்பட்டதையடுத்து கடந்த 1 மாதத்திற்கும் மேலாக அங்கு கொந்தளிப்பான நிலை நீடித்து வருகிறது. அங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 60க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்ததுடன் பாதுகாப்பு படையினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நீடிப்பதால், இன்னும் காஷ்மீரில் பல இடங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. 

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மூக்கை நுழைத்து அத்துமீறி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. ‘‘காஷ்மீர் ஒருநாள் பாகிஸ்தான் வசமாகும்’’ என சில தினங்களுக்கு முன்பு பாக். பிரதமர் நவாஸ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது.கடந்த வாரம், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட நமது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுகிறது’’ என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.  

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில், ஹிஸ்புல் முஜாகிதீன்  அமைப்பின் தலைவர் சையது சலாஹுதீன் இன்று நிருபர்களிடம்  கூறுகையில், 

‘‘காஷ்மீர் மக்களின் சுதந்திரத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டியது பாகிஸ்தானுடைய கடமை. காஷ்மீரில் கடைசி வரை போராடுவார்கள்.இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் ஆதரவு அளித்தால் இந்தியா மீது அணு ஆயுத போர் நடக்கும்.காஷ்மீரை மீட்க பாகிஸ்தான் அரசுக்கு தார்மீக கடமை உள்ளது. 

காஷ்மீர் சுதந்திர போராட்டத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்க வேண்டும். அவ்வாறு பாகிஸ்தான் ஆதரவு அளித்தால், இந்தியா மீது அணு ஆயுத போர் நடைபெறும். உலக நாடுகள், பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆதரவு அளித்தாலும் இல்லாவிட்டாலும், ஐ.நா, தனது கடமையை செய்தாலும் செய்ய தவறினாலும், காஷ்மீர் மக்கள் தங்களது கடைசி சொட்டு ரத்தம் சிந்தும் வரை போராடியே தீர்வார்கள்’’ என்று மிரட்டியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடக்கும் .. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடக்கும் .. Reviewed by Madawala News on 8/08/2016 09:50:00 PM Rating: 5