Accaddemy

பங்குறான மினுமினுத்தவெளி கிராமத்தின் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.


கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி.

நாச்சியாதீவு பர்வீன்.

பங்குறான மினுமினுத்தவெளி கிராமத்தின் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வினை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்வதாகவும்,அடிப்படை வசதிகளற்ற இந்த பிரதேசத்தில் அபிவிருத்தி செய்ய தான் ஆர்வமாக இருப்பதாகவும்    கௌரவ பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்  அமீர் அலி தெரிவித்தார்.  பங்குறான மினுமினுத்தவெளி கிராமத்தின் விவசாயிகளின் அழைப்பினை ஏற்று அந்தப்பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு,அந்த மக்களுடன் உரையாடிய போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

உங்கள் பிரச்சினைகள் பற்றி நீங்கள் கூறியுள்ளீர்கள்,அவற்றை நிவர்த்தி செய்கின்ற வேலைத்திட்டங்களை நான் ஆரம்பிக்கவிருக்கிருறேன். எல்லாவிடயங்களும் நீங்கள் கேட்ட மாத்திரத்தில் செய்துவிட முடியாது.  மாறாக எல்லா விடயங்களுக்கும் ஒரு கால எல்லை அவசியம். இந்த நல்லாட்சி ஏழை விவசாயிகளின் விடயத்திலும்,பாதிக்கப்பட்டவர்களின் விடயத்திலும் மிகுந்த அவதானத்துடனும்,கரிசனையுடனும் நடந்து கொள்கின்ற போக்கை கொண்டுள்ளது. எமது அமைச்சும் இந்த விவசாயிகளின் வருமானத்தையும்,வாழ்வாதாரத்தையும் முன்னேற்றுகின்ற விடயத்தில் புதிய வழிமுறைகளை உத்தேசித்துள்ளது. இந்தத்திட்டங்கள் அமுல் படுத்தும் போது அதன் பயனாளிகளாக நீங்களும் கட்டாயம் இருப்பீர்கள். மூக்கிறையன் ஓடை பாலம், காரையடிப்பட்டி மதகு, பொத்தானை கூலாக்காடு வாய்க்கால் போன்றவற்றை விரைவில் செய்து தருவதாக கூறினார்.

அங்குள்ள விவசாயிகளின் கருத்துக்களையும் பிரதியமைச்சர் கேட்டறிந்தார் அதன்போது அந்தப்பிரதேசத்தில் வாழ்கின்ற விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை அந்த விவசாயிகள் பிரதியமைச்சர் முன்னிலையில் தெரியப்படுத்தினர்.  விவசாயிகளின் போக்கு வரத்து பிரச்சனையாக காணப்பட்ட ஆற்றுக்கு பாலம் அமைத்தல்,மற்றும் மாண்டான் குளத்தை புனரமைத்தல் தொடர்பாக கலந்துரையாடலில் பேசப்பட்டது. அத்தோடு அங்கு வாழும் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பாடசாலைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது மிகவிரைவில் இங்குள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என பிரதியமைச்சர் அமீர் அலி  அங்கு குறிப்பிட்டார்.
பங்குறான மினுமினுத்தவெளி கிராமத்தின் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு. பங்குறான மினுமினுத்தவெளி கிராமத்தின் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு. Reviewed by Madawala News on 8/30/2016 09:41:00 AM Rating: 5