இந்த சுவரொட்டி நேரடியாகவும் மறைமுகமுகமாகவும் சொல்லும் தகவல்கள் .. ஒரு இந்து நண்பரின் கருத்து



இன்று வீட்டுக்கு நடந்து வரும் வழியில் இந்தச் சுவரொட்டியினைப் பார்த்தேன். இறந்தவரின் பெயர் கேள்விப்பட்ட ஒன்றுதான் எனினும் தனிப்பட இவரை எனக்குத் தெரியாது. சுவரொட்டி நேரடியாகவும் மறைமுகமாகவும் தரும் கீழ்வரும் தகவல்கள் மிக முக்கியமானவையாகப்பட்டன. 

1. இந்து பௌத்த பேரவை, இந்து சம்மேளனம், விசுவ இந்து பரிசத் ஆகிய அமைப்புக்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. இந்தியாவின் RSS, சிவசேனா, BJP உள்ளிட்ட இந்துப் பயங்கரவாத அமைப்புக்களுடன் இங்குள்ள இவ்வாறான இந்து அமைப்புக்களுக்கு நெருங்கிய தொடர்புண்டு. 

2. காலகாலமாக தமிழில் பயன்படுத்தப்பட்டுவரும் "திரு" வுக்குப் பதிலாக இந்த ஜி போடும் வழக்கம் இந்துத்துவா கொள்கை வழிப்பட்டது. தமிழ் மொழி மீதான திட்டமிட்ட தாக்குதலும் வடமொழித் திணிப்பும் இவர்களிடமிருந்து பிரிக்க முடியாத நிகழ்ச்சி நிரலாகும்.

3. இலங்கையின் பௌத்த பேரினவாதப் சக்திகளான பொதுபல சேனா போன்றவற்றுடன் கூடிக்குலாவும் இந்து அமைப்புக்கள், இந்தியாவின் இந்துத்துவா அமைப்புக்களுடன் தொடர்புள்ளவை. ஆக, இந்திய இந்துத்துவா, இலங்கையின் தமிழர் உட்பட்ட சிறுபான்மைகளுக்கு எதிரான பௌத்த சிங்களப் பேரினவாதிகளுடன் மிகவும் திட்டமிட்ட இணக்கப்பாட்டுடன் உள்ளது. இந்திய இறக்குமதியான இந்துத்துவா, முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும் எதிரானது.

-முரளிதரன் மயூரன்-

இந்த சுவரொட்டி நேரடியாகவும் மறைமுகமுகமாகவும் சொல்லும் தகவல்கள் .. ஒரு இந்து நண்பரின் கருத்து இந்த சுவரொட்டி நேரடியாகவும் மறைமுகமுகமாகவும் சொல்லும் தகவல்கள் .. ஒரு இந்து நண்பரின் கருத்து Reviewed by Madawala News on 8/13/2016 07:35:00 AM Rating: 5