Ad Space Available here

இனபேதம் இல்லை என்று பேசுவது வெறும் வார்த்தை ஜாலமாக மட்டுமே உள்ளது.


இனபேதம் இல்லை என்று பேசுவது வெறும் வார்த்தை ஜாலமாக மட்டுமே உள்ளது.அது பேச்சுக்காக மட்டுமே  பயன்படுத்தப் படுகிறது என மத்தியமாகாண சபை அங்கத்தவர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார். 

மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு அதன் தலைவர் எல்.டி.நிமலசிரி தலைமையில் பல்லேகலை மாகாண சபை கட்டிடத்தொகுதியில் இடம் பெற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மாகாண சபை அங்கத்தவரான நிமல் பிரேமவன்ச வினால் முன் மொழியப்பட்ட பிரேரணை ஒன்றின் மீதான விவாதித்ததிலே அவர் இதனைத் தெரிவித்தார். மத்திய மாகாண சபையின் மொத்த சனத் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினராக சிறுபான்மை மக்கள் இருப்பதனாலும், 58 அங்கத்தவர்களைக் கொண்ட மத்திய மாகாண சபையில் 18 பேர் தமிழ் மொழி பேசும் அங்கத்த்வர்களாகவும் உள்ள நிலையில் மாகாணத்தின் சகவாழ்விற்கு பங்கம் ஏற்படும் வகையில் நாட்டில் ஒரு சிலர் செயற்படுவதாகவும் இதற்கு எதிராக ஒரு வேலைத்திட்டம் தேவை எனவும் தெரிவித்து அப்பிரேரணை முன் வைக்பட்டிருந்தது.  இது தொடர்பாக இடம் பெற்ற விவாதத்திலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது-
 
1815ம் ஆண்டு இலங்கை முழுமையாக பிரித்தானியர் வசமானது. அன்று முதல் எமது பாரம்பரியங்கள், கலாச்சாரம். நாம் பாதுகாத்து வந்த சமூக விழுமியங்கள் அனைத்தும் அவர்களால் பறிக்கப்பட்டு விட்டது. பின்னர் எமது தலைவர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக 1948ல் எமக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்தை வழங்க முன் பிரித்தானிய ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனத்தவர்களிடம் அது பற்றிக் கேட்டனர்.
முஸ்லிம்களின் தலைவராக இருந்த டி.பி.ஜாயா கூறிய விடயம் எனது உள்ளத்தை தொட்டுச் செல்கிறது. எமது உள்நாட்டு விடயங்களை நாம் பாhத்துக் கொள்கிறோம். முதலில் எமக்கு சுதந்திரத்தை தந்து விட்டு நீங்கள் வெளியேருங்கள் என்றார்.

இதே விதம் இந்தியாவிலும் கேட்கப்பட்டது. அன்று மகாத்மா காந்தி, நேருஜீ, ஜின்னா போன்றவர்கள் ஒற்றுமையாக இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டாலும் காலப் போக்கில் அவர்கள் அன்றைய இந்தியாவை இன்றைய பாகிஸ்தான் என்றும், இந்தியா என்றும் பிரித்துக் கொண்டார்கள். பின்னர் பாகிஸ்தான் வங்காள தேசமாகப்பிரிந்தது. ஆனால் எமது தலைவர்கள் அப்படி எமது நாட்டை துண்டு போடவும் இல்லை. இனிமேல் போடவும் மாட்டோம். அந்த அடிப்படையில் டி.பி. ஜாயாவின் பேச்சு எமக்கு பெருமை தருகிறது.

ஆனால் 1983ல் வடபகுதியில் ஒரு பயங்கரவாதக் குழுவே தனி நாடு கோரியது. அதற்கு மலையக மக்கள் அதரவு வழங்க வில்லை. வடக்கில் இருந்த முஸ்லிம்களும் ஆதரவு வழங்கவில்லை. அதன் விளைவு என்னவானது. உடுத்த உடையுடன் 4 மணி;த்தியால இடைவெளியில் ஒரு இலட்சம் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வட பகுதியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்கள் இன்றும் அகதி வாழ்வு வாழ்கின்றனர். தமிழ் தனி நாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு வழங்காத காரணத்தால் ஏற்பட்ட ஒரு துயரச்சம்பவமாகும். விடுதலைப்புலிகள் விடுத்த வேண்டுகோளை நிராகரித்ததன் விளைவாகும். ஏக்கார்திலும் முஸ்லி;கள் சிங்களவருடன் இணைந்து செயல் படுகி;ன்றனர். ஆனால் இன்று சமயம் என்ற பெயரில் சிலர் அரசியல் செய்ய முற்பட்டு அதனால்தான் அவ்வப்போது முஸ்லிம் - சிங்கள உறவில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

30 வருட யுத்தத்தை முடித்த பின் மகிந்த ராஜபகச ஆற்றி உரை மிகப்பிரபலமானது. அதுதான் இன்று முதல் நாட்டில் பெரும்பான்மை, சிறுபான்மை என்று இரண்டு கிடையாது. நாட்டை நேசிக்கும் ஒரு கூட்டமும் நாட்டை நேசிக்காத ஒரு கூட்டமுமே உண்டு என்றார். அத்துடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நாட்டை ஆட்சி புரிந்தார். நாம் ஒரே இனம் என்றம் இனபேதம் இல்லை என்றும் வெறும் வார்த்தை ஜாலமாக மட்டுமே இருப்பதையே காண்கிறோம். 

பேச்சுக்காகக மட்டுமே அதனை பயன்படுத்துவது கவலை தருகிறது. அவர் இனவாதத்திற்கு ஆதரவாக எதுவும் செய்ய வில்லை. இனவாதத்திற்கு எதிராக செயற்படாமல்  மௌனம் சாதித்தார். மௌனம் சாதிப்பதும் இனவாதத்தை ஆதரிப்பதும் இரண்டும் ஒன்றே. அதுதான் தர்காநகர் கொதித்தெழுந்தது.
நாம் வசிக்கும் நாட்டிற்கு நாம் விசுவாசியாக இருக்க வேண்டும் என்பது ஒரு ஹதீஸ். புத்த பெருமானும் அதனைக் கூறியுள்ளார். 

அதாவது ஒருகாத்தாவில் எவராகப்பிறந்தாலும் எல்லோரும் பிராமணாராகவே(உயர் சாதியாகவே) வாழ வேண்டும் என்பதாகக் மூறியுள்ளதாகும். 1948 முதல் இரண்டு பிரதான கட்சிகளும் பிரிந்தே செயற்பட்டன. ஆனால் 2015 முதல் பிரதான கடசிகளின் கூட்டு ஏற்பட்டது. இந்த புதிய அணுகு முறையால் என்ன நடக்கிறது என்பதை பொறுமையாக இருந்து அவதானிக்க வேண்டும். அதற்கு சகல தரப்பும் உதவ வேண்டுமே ஒழிய குழப்பி அடிக்கக் கூடாது என்றார்.

சிங்கப்பூரின் சிற்பியான லீகுவான்யூ நாட்டுமக்களுக்கு என்ன சொன்னார் தெரியுமா? முஸ்லீமகளே நீங்கள் மத்திய கிழக்கின் வளங்களை எமது நாட்டுக்கு கொண்டு வந்து நாட்டை முன்னேற்றுங்கள் என்றார். அதேபோல் தமிழர்களே உங்களது இந்தியாவின் வளங்களை சிங்கப்பூருக்குக் கொண்டு வந்து சி;ங்கப்பூரை முன்னேற்றுகள் என்றார்.

 சீனப் பிரஜைகளே சீனாவின் வளங்களை எமது நாட்டுக்கு கொண்டு வாருங்கள் என்றார். அதனால்தான் சிங்கப்பூர் முன்னேறியது. வாயளவில் சிங்கப்பூராக மாற்ற முடியாது. நாட்டிலுள்ள சகல இனங்களும் சேர்ந்து ஒரு தேசியம் என்ற உணர்வு ஏற்படாத வரை எந்த நாடும் உருபட்டதாக இல்லை என்றார்.
இனபேதம் இல்லை என்று பேசுவது வெறும் வார்த்தை ஜாலமாக மட்டுமே உள்ளது. இனபேதம் இல்லை என்று பேசுவது வெறும் வார்த்தை ஜாலமாக மட்டுமே உள்ளது. Reviewed by Madawala News on 8/25/2016 11:49:00 AM Rating: 5