Free Space

ஊடக நிறுவனம் ஆரம்பிக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனின் மருமகன்


மத்திய வங்கி முறி சர்ச்சையில் சிக்கிய முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனின் மருமகன் அர்ஜுன் அலோசியஸ் ஊடக நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆங்கில , சிங்கள பத்திரிகை மற்றும் இரு தொலைகாட்சி செனல்கள் ஆகியவற்றை ஆரம்பிக்க அவர் நடவடிக்கை முன்னெடுத்துள்ள அதேவேளை அதற்காக பிரபல ஊடகங்கள் சிலவற்றின் பணிபுரியும் சிலருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கி ஆளுநராக அர்ஜுன் மஹேந்திரன் பதவி வகித்த காலத்தில் மத்திய வங்கி முறிகளை முறைகேடாக தனது மருமகன் அர்ஜுன் அலோசியஸின் நிறுவனத்துக்கு பெற்றக்கொடுத்ததாக பலத்த சர்ச்சை எழுந்தது.

அர்ஜுன் அலோசியஸ் இன் பெற்றோர் (வீரகேசரி )எக்ஸ்பிரஸ் நியுஸ்பேபர் நிறுவந்தில் பங்குதாரர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஊடக நிறுவனம் ஆரம்பிக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனின் மருமகன் ஊடக நிறுவனம் ஆரம்பிக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனின் மருமகன் Reviewed by Madawala News on 8/07/2016 08:57:00 AM Rating: 5