Yahya

எதிர்கட்சி தலைவரிடம் மகஜர் கையளிப்பு .(கே. ஹமீட்)

இலங்கை கல்வி சாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் கிழக்கு மாகாண கல்வி சாரா ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கல்வி சாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பையை இன்று (15) சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது அச்சங்கத்தின் அம்பாறை மாவட்ட செயலாளர் எம்.ஜே.எம். சஜீத்; கிழக்கு மாகாண கல்வி சாரா ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சிணைகள் தொடர்பான மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

இதன்போது சங்கத்தின் பிரதி தலைவர் எம்.ஏ.எம். அப்துல்லா, உட்பட உறுப்பினர்களும்; கலந்து கொண்டனர்.

அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..


கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி அறிவினை வளர்க்கும் பாடசாலைச் செயற்பாடுகளில் ஆசிரிய சமூகத்தினரைப் போலவே கல்வி சாரா ஊழியர்களான நாங்களும் மாணவர்களின் மேம்பாட்டுக்காக கூடியபட்ச முனைப்புடன் இத்துறையின் முன்னேற்றத்தை முன்னிறுத்திப் பணிபுரியும் ஊமியர் சமூகமாகும்.
ஆயினும், நாம் உண்மையில் அரச ஊழியர்கள்தானா? அவ்வாறில்லையேல், நிறுவனத் தலைவர்களின் தனிப்பட்ட ஊழியர்களா? என்ற ஐயப்பாடு எமக்கு ஏற்பட்டுள்ளமையை, தாங்கள் எம்மீது கருணை காட்டி இது குறித்து தங்களின் மேலான கவனத்தைச் செலுத்துவீர்கள் என்ற திடமான நம்பிக்கையுடன் இதனைத் தங்களுக்கு தாழ்மையுடன் தெரியப்படுத்துகின்றோம்.

1. வட-கிழக்கு மாகாண சபை இயங்கிய காலகட்டத்தில்  மாகாண சபை பாடசாலைகள் பல பின்னர் தேசிய பாடசாலைகளாக ஆக்கப்பட்ட போதும் அவற்றில் கடமையாற்றிய கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஆட்கள் மத்திய அரசாங்க சேவைக்கு உள்வாங்கப்படாமை
(பின்னினைப்பு ii ன் படி விரும்பியோரை விடுவித்தல்).

2. மாகாண பாடசாலைச் செயற்பாடுகளில் பௌதீகச் சொத்துகளைப் பாதுகாப்பதற்காக பகல் இரவு நாள் முழுவதும் கடமை புரியும் காவலாளிகளுக்கு கடமைக்கான அடையாள அட்டை வழங்காமை.

3. காவலாளிகளின் இரவு நேரக் கடமைக்கு அவசியமான டோர்ச் லைட், மழைக்கோட், குடை போன்ற வசதிகள் எதையும் செய்துகொடுக்காமை.

4. அரச விடுமுறை தினங்களுக்கு தாபனக் கோவையின் பிரிவு viii  பந்தி 9.2 ன் படி (1/30) மேலதிக நாள் சம்பளம் அல்லது பதில் விடுமுறை வழங்கப்படுவதில்லை.

5. முக்கிய சொந்நக் காரணமொன்றுக்காக லீவு பெறுவதாக இருந்தால் சொந்தப் பணத்தில் பதில் காவலாளர் ஒருவரை ஏற்பாடு செய்யவேண்டியேற்படுதல்.


6. 06/2000 இலக்க அரச நிர்வாக சுற்று நிருப கட்டளைகளின் படி ஆரம்பத் தேர்ச்சியற்ற ஊழியர் குழாத்தின் iii தரத்திற்கு காவலாளிகள் நியமிக்கப்படும் போது  ரூபா. 11730/- அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட்டாலும், வாரத்திற்கு 06 நாட்களும் நாளொன்றிற்கு மேலதிக நேரம் இன்றி தொடர்ச்சியாக  12 மணி நேர வேலையும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றமை.

7.அப்போதைய வட – கிழக்கு மாகாண சபையினால் ஏற்படுத்தப்பட்டு 2001.11.25 ஆம் திகதி கௌரவ ஆளுனர் அவர்களினால் அங்கரிக்கப்பட்டிருந்த ஆட்சேர்ப்பு நடைமுறையில் இருந்த வாசிகசாலை


8.ஊழியர் மற்றும் ஆய்வு கூட ஊழியர் பதவிகள் 2014.07.01 தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஆரம்ப தேர்ச்சியற்ற ஊழியர் குழாத்திற்கென அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறையினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை.

9.பதவிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து பாடசாலை உதவியாளர் என ஒரே பதவியாக்கி (காவலாளிகள் நீங்கலாக) பதவியின் சம்பளத் தரம் மாத்திரம் கவனத்திற்கு கொள்ளப்படுகின்றது. இது அநீதியாகும். பாடசாலை தேவைகளின் படி, வாசிகசாலை மற்றும் ஆய்வு கூடத்தில் ஆசிரியர்களின் உதவிக்கு ஊழியர்கள் தேவை. இரத்து செய்யப்பட்டுள்ள பதவிகளின் தேவையை நியாயப்படுத்தி  மீண்டும் ஏற்படுத்தி தருமாறும், காவலாளிகள் வேறு பதவிகளுக்கு நியமனம் பெற சந்தர்ப்பம் வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

10. மேலும் ஆய்வுகூட உதவியாளராக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள  அலுவலர்களுக்கு தேசிய சம்பள மற்றும் ஊழியர் எண்ணிக்கை ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்டுள்ள MN1-2006 சம்பள அளவுதிட்டத்திற்குப் பதிலாக PL1/2006 சம்பள அளவுதிட்டத்தின் கீழ் சம்பளம் வழங்கும் அநீதியை இன்றுவரை திருத்தியமைக்காதிருத்தல்.

11. எமது சேவையை இடையுறாது பெற்றுக்கொள்கின்ற போதிலும், உரிய சலுகைகள் எமக்குக் கிடைப்பதில்லை.


அனர்த்தக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது போதிய கவனம் செலுத்தப்படாமையினால் கல்வி சாரா ஊழியர்களினால் ஒரு குறிப்பிட்ட வீதத்தினரை வருடாந்தம் ஒதுக்கி  வைத்து கடன் வழங்காதிருத்தல்.

மனித வள விருத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், கல்வி சாரா ஊழியர்களுக்கு பயிற்சிக்கான சந்தர்ப்பம் கிடைக்காமை.

(iii) தர காவலாளிகளுக்கு சீருடைக்கான கொடுப்பனவு கிடைப்பதில்லை.

ஆய்வுகூட மற்றும் வாசிகசாலை பதவியாளர்களுக்கு அத்தியவசிய கடமைச் சந்தர்ப்ப அழைப்புக் கட்டளைகளுக்கு ஏற்ப பருவ முடிவு விடுமுறை வழங்காமை (பல மாகாண சபைகளிலும், மத்திய அரசிலும் இது நடைமுறையிலுள்ளது.

மாகாணத்தின் மிகக் கஷ்டமான பாடசாலைகளில் பணிபுரிபவர்களுக்கு கஷ்டப் பிரதேச கொடுப்பனவு வழங்கப்படாமை என்பனவாகும்
எதிர்கட்சி தலைவரிடம் மகஜர் கையளிப்பு . எதிர்கட்சி தலைவரிடம் மகஜர் கையளிப்பு . Reviewed by Madawala News on 8/16/2016 02:42:00 PM Rating: 5