Kidny

Kidny

அளுத்கம கலவரத்தின் பின்னணியில் அப்போதைய அரசாங்கம் இருந்தது...


-எம்.ஆர்.எம்.வஸீம் -


பொலிஸாரும் பக்கச்சார்பாக செயற்பட்டனர் என்கிறார் சந்திரிக்கா
அளுத்­கம கல­வ­ரத்தின் பின்­ன­ணியில் அப்­போ­தைய அர­சாங்­கமே இருந்து செயற்­பட்­ட­தாக சாடி­யுள்ள முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க அச்­சம்­ப­வத்தின் போது பொலி­ஸாரும் பக்­கச்­சார்­பாக நடந்­து­க்கொண்­ட­தாக குற்றம் சுமத்­தினார்.

வேளை, கடந்த காலங்­களில் நாட்டில் இடம்­பெற்ற கல­வ­ரங்­க­ளின்­போது அப்­போது இருந்த அர­சாங்­கங்கள் அதனை தடுக்­காமல் அதற்கு பின்­ன­ணி­யாக இருந்து செயற்­பட்­டுள்­ளன என்றும் சந்­தி­ரி­கார குமா­ர­துங்க தெரி­வித்தார். 

2014 ஆம் ஆண்டு அளுத்­க­மவில் இடம்­பெற்ற கல­வரம் தொடர்­பாக புத்­தி­ஜீ­விகள் கலந்­து­கொண்ட கலந்­து­ரை­யாடல் வெள்­ளிக்­கி­ழமை சர்­வ­தேச கற்­கை­க­ளுக்­கான பண்­டா­ர­நா­யக்க நிலை­யத்தில் நடை­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,
அளுத்­கம சம்­பவம் போன்று நாட்டில் பல சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. இந்தச் சம்­ப­வங்­க­ளின்­போது அப்­போது இருந்த அர­சாங்­கங்கள் அதனை கட்­டுப்­ப­டுத்­தாமல் அதற்கு பின்­ன­ணியில் இருந்து செயல்­பட்­டுள்­ளன.  பொலி­ஸாரும் பக்­கச்­சார்­பா­கவே நடந்­து­கொண்­டுள்­ளனர்.

நாட்டின் சுதந்­தி­ரத்­துக்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இன­வாத பிரச்­சி­னைகள் இருக்­க­வில்லை. ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ரா­கவே மக்கள் ஆர்ப்­பாட்­டங்­களை போராட்­டங்­களை நடத்­தினர்.

ஆனால் நாட்டில் இருந்த அர­சாங்­கங்கள் தோல்வி கண்ட இரண்டு சந்­தர்ப்­பங்­க­ளாக 83 ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வரம் மற்றும் அளுத்­த­கம சம்­ப­வங்­களை குறிப்­பி­டலாம்.

 இந்த இரண்டு சம்­ப­வங்­க­ளின்­போதும் அன்று இருந்த ஆட்­சி­யா­ளர்கள் கல­வ­ரத்தை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­காமல் பின்னால் இருந்து செயற்­பட்­டுள்­ளனர்.

மேலும் எந்த இனத்தை சார்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் நாட்டு பிர­சை­களை பாது­காப்­பது அர­சாங்­கத்தின் கடமை. ஆனால் மற்றும் 2014 சம்­ப­வங்­களில் அர­சாங்கம் தோல்­வி­கண்­டுள்­ளது.

அத்­துடன் 2014/ 15 காலப்­ப­கு­தியில் முஸ்­லிம்­களின் பள்­ள­வா­சல்கள் மற்றும் கடைகள் பாரி­ய­ளவில் சேதத்­துக்­குள்­ளாக்­கப்­பட்­டமை சக­லரும் அறிந்த விடயம். ஆனால் இந்தச் சம்­ப­வங்­களின் பின்­ன­ணியை அர­சாங்கம் கண்­டு­கொள்­ளாமல் இருந்­தது.

அதே­போன்று எனது தந்­தையின் ஆட்­சிக்­கா­லத்தில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக சம்­பவங்கள் நடந்­த­போது அதனை 3 தினங்­களில் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்தார்.

எனது ஆட்­சி­யின்­போதும் கிறிஸ்­தவ ஆல­யங்கள் மீது தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

அதனை நாங்கள் பாரிய சம்­ப­வங்­க­ளாக மாறாமல் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்தோம். இவ்­வா­றான சம்­ப­வங்­களின் போது அர­சியல் வாதிகள் தங்கள் அர­சியல் வட்­டத்­துக்குள் இருந்து வெளி­யேறி மக்­களை பாது­காக்க முன்­வ­ர­வேண்டும்.

மேலும் எனது ஆட்சிக் காலத்தில் வடக்கு யுத்­தத்தை பேச்­சு­வா­ர்த்தை மூலம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரவே நான் முயற்­சித்தேன். அதற்­காக அன்று 23வீத­மான சிங்­கள மக்­களே ஆத­ர­வாக இருந்­தனர்.

ஆனால் அந்த காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற தேர்தல் மேடை­களில் இது­தொ­டர்­பாக நான் பகி­ரங்­க­மாக பேசினேன். தமிழ் மக்­க­ளுக்கு உரி­மைகள் வழங்­கப்­ப­ட­வேண்டும் என தெரி­வித்தேன். இதன் கார­ண­மாக எனது வாக்­குகள் அதி­க­ரித்­ததே தவிர குறை­வ­டைய வில்லை. அதன் பிறகு சிங்­கள மக்­களில் 68வீத­மா­ன­வர்கள் பேச்­சு­வார்த்தை மூலம் இனப்­பிச்­சி­னைக்கு தீர்வு காண ஆத­ர­வ­ளித்­தனர். ஆனால் குறு­கிய அர­சியல் கார­ண­மாக அது இடம்­பெ­ற­வில்லை.

மேலும் நாட்டில் அல்­கைதா, ஐ.எஸ்., தலிபான் போன்ற அமைப்­புக்கள் இல்லை. என்­றாலும் சிறு­சிறு அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் இருக்­கின்­றன. அது சிங்­கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து இனங்­க­ளிலும் இருக்­கின்­றன. இலங்­கையில் மாத்­திரம் அல்ல அனைத்து நாடு­க­ளிலும் அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் இருக்­கின்­றன. அத்­துடன் 1957 ஆம் ஆண்­டுக்கு பின்­னரே அடிப்­ப­டை­வா­திகள் நாட்டில் தோன்­றினர். அதற்கு அர­சாங்­கங்­களும் பின்­ன­ணியில் இருந்­துள்­ளன.

தற்­போது நாட்டில் யுத்தம் இல்லை. நல்­லி­ணக்­கத்­துக்கு தேவை­யான நட­வ­டிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது.

அத்­துடன் நாட்டில் நீண்ட கால நல்­லி­ணக்­கத்­துக்கு அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக சிறு­பான்மை மக்­க­ளுக்கு சம உரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும்.

புதிய அர­சாங்கம் நல்­லி­ணக்­கத்­துக்­கான வேலைத்­திட்­டங்ளை மேற்­கொண்டு வரு­கின்­றது. அந்த வகையில் கடந்த காலங்­களில் காணாமல் போன­வர்கள் தொடர்பில் கண்­ட­றி­வ­தற்­காக அலு­வ­லகம் அமைக்­கப்­ப­டு­கின்­றது. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நஷ்­டஈடு வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. அதேபோன்று யுத்த குற்றச்சாட்டுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள விசேட நீதிமன்றம் அமைக்கவிருக்கின்றோம். 

அத்­துடன் இவ்­வா­றான சம்­ப­வங்கள் நாட்டில் மீண்டும் ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுத்­து­வ­ரு­கின்றோம். இதற்கான வேலைத்­திட்­டங்­களை பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்ளோம்.

அத்­துடன் வடக்கு கிழக்கில் அடிப்­படை தேவைகள் குறித்தும் கவ­னித்து வரு­கின்றோம். எனவே குரோதம், வைராக்­கி­யத்தை விட்டு அனை­வரும் ஒன்­றி­ணை­வ­தன்­முலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்றார். 
அளுத்கம கலவரத்தின் பின்னணியில் அப்போதைய அரசாங்கம் இருந்தது... அளுத்கம கலவரத்தின் பின்னணியில் அப்போதைய அரசாங்கம் இருந்தது... Reviewed by Madawala News on 8/29/2016 12:56:00 PM Rating: 5