புதிய குற்றச்சாட்டு.. மொஹமட் முஸம்மில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்.



தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் ஆஜராகியுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு பணிப்பாளராக பணியாற்றிய காலத்தில் வழங்கப்பட்ட நியமனங்கள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக தான் இங்கு அழைக்கப்பட்டதாக இன்று (19 காலை ஊடகங்களிடம் முஸம்மில் கூறினார்.

இவர் சென்ற அரசில் ஜனாதிபதி அலுவலக வாகனங்களை பாவிப்பதில் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரு மாதத்திற்கும் அதிகமாக சிறைவாசம் அனுபவித்து தற்போது பிணையில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய குற்றச்சாட்டு.. மொஹமட் முஸம்மில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர். புதிய குற்றச்சாட்டு.. மொஹமட் முஸம்மில்  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர். Reviewed by Madawala News on 8/19/2016 02:29:00 PM Rating: 5