மக்கள் காங்கிரசின் தேர்தல் திருத்தச்சட்ட வரைபு இறுதிக்கட்டத்தில் அரசியலமைப்புச் சபைக்கு கையளிக்க ஏற்பாடு..

 
சுஐப் எம்.காசிம்  
அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிராஸ் இன்று மாலை (29.08.2016) கொழும்பில் கூடி தீர்க்கமாக ஆராய்ந்து இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது.

மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்ற இறுதிக்கட்டக் கலந்துரையாடலில் சட்டத்துறை அரசியல்துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு அது தொடர்பில் மிக முக்கியமான தலைப்புக்களில் ஆராய்ந்து காத்திரமான முடிவுகளை மேற்கொண்டனர்.

கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் இருந்து பெற்ற தகவல்கள்ஆலோசனைகள் கருத்துக்களை இவர்கள் பரிசீலித்ததுடன் சமூகம் சார்ந்த  புத்திஜீவிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகளையும் தமது கருத்துக்கு எடுத்தனர்.

இத்தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கட்சியால் உருவாக்கப்படும் இறுதி வரைபை மிக விரைவில் பல்வேறு அமைப்புக்களிடம் வழங்கி வைப்பதற்கும் அரசியலமைப்பு சபையிடம் அதனை கையளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர்இ அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.    

இந்த இறுதிக்கட்டக் கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் சுபைர்தீன் ஹாஜியார் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அணீஸ் சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம்.சஹீத் ருஸ்தி ஹபீப் பிரபல ஆய்வாளர் எம்.ஐ.எம்.மொஹிடீன் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர்  கலாநிதி இஸ்மாயில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஜீத் (எஸ்.எஸ்.பி)இ மனிதஉரிமை ஆர்வலர் கலாநிதி யூஸுப் கே. மரைக்கார் ஆகியோர் பங்கேற்றனர்.          
மக்கள் காங்கிரசின் தேர்தல் திருத்தச்சட்ட வரைபு இறுதிக்கட்டத்தில் அரசியலமைப்புச் சபைக்கு கையளிக்க ஏற்பாடு.. மக்கள் காங்கிரசின் தேர்தல் திருத்தச்சட்ட வரைபு இறுதிக்கட்டத்தில் அரசியலமைப்புச் சபைக்கு கையளிக்க ஏற்பாடு.. Reviewed by Madawala News on 8/29/2016 09:40:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.