Ad Space Available here

சவால்களுக்கு மத்தியில் உயிர்த்தெழும் பதுளை பஹ்மியா மத்ரஸா

கடந்த சுமார் 30 வருட கால வரலாற்றைக் கொண்ட பதுளை பஹ்மியா மதுரசா அண்மைய காலங்களில் பல சவால்களுக்கு முகம் கொடுத்து பல நிர்வாக சிக்கல்களை எதிர் கொண்டது. இம்மதுரசா மீது பல பொய்யான விடயங்களை இட்டுக்கட்டப் பட்டு இதன் சுதந்திரமான வளர்ச்சிக்கு பாரிய முட்டுக் கட்டைகள் இடப் பட்டன. 

குறிப்பாக பதுளை ஜம்மியத்துல் உலமா கடிதத் தலைப்பில் இம்மதுரசாவுக்கு நன்கொடைகள் மற்றும் மாத சந்தா போன்ற எவ்வித உதவிகளையும் செய்யவேண்டாம் என்று இலங்கையின் பல பாகங்களுக்கு அறிவித்தல் கொடுக்கப் பட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த ரமலான் மாத வருமானத்தில் சுமார் அறுபது இலட்ச ரூபா இம்மதுராசாவின் வருமானம் தடைபட்டது. 


அப்பட்டமான பொய்களையும் படுதூர்களையும் இட்டுக்கட்டி இந்த சதிகளின் பின்னணியில் இருந்தவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் உத்தியோக பூர்வமாக எடுக்கப்ட்ட நிலையில் இந்த செய்திப் பதிவு வெளியிடப் படுகின்றது.

இம்மதுரசாவின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பு செய்த நன்கொடையாளர்கள் சந்தாதாரர்கள் நலன் விரும்பிகளுக்கு இன்ஷாஅல்லாஹ் காலக் கிராமத்தில் உண்மை நிலைமைகளை தகுந்த ஆதாரங்களுடன் விளக்கமளிக்கப்பட்டு இதன் பின்னணியில் செயற்பட்ட உலமாக்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் சிலரின் முக மூடிகள் வெகு விரைவில் கிழித்தெறியப் படும் என்று இம்மதுரசாவின் தற்போதைய நிர்வாக செயலாளர் முன்னாள் அதிபர் ஏ எம் எம் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

தளம்பல் நிலையில் இருந்த இம்மதுரசாவை மீட்டு நாட்டில் ஒரு தலை சிறந்த மதுரசாவாக மாற்றி கால சூழலுக்கு ஏற்ற உலமாக்களை உருவாக்கும் நோக்கில் புதியதொரு நிர்வாக சபையும் சட்டபூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது.
கீழ் காணும் வகையில் அந் நிர்வாக சபை அமைந்துள்ளது.

ஆலோசகர்கள் :-   01.அஷ்ஷைக் அல் ஹாஜ் ஏ ஆர் எம் இஷாக் சஹ்ரி (காதி நீதிவான் பதுளை மாவட்ட  ஜம்மியத்துல் உலமா தலைவர் )
                          02 அல் ஹாஜ் பாசில் அசீஸ் (ஓய்வுபெற்ற ஆசிரியர் பதுளை முஸ்லிம் விவாகப் பதிவாளர்.)
                          03 . அல் ஹாஜ் ஆப்துல் ரஜாக் ( ஓய்வுபெற்ற அதிபர் )

தலைவர்        :-  அல் ஹாஜ் ஏ எச் எம் ஜாபிர் ( முன்னைநாள் பிரதி மேயர்)

உப தலைவர் :- 

(1) அல் ஹாஜ் எம் எம் ஹிதாயத்துல்லாஹ்( பஹ்மி)  (முன்னை நாள் அதிபர் பஹ்மியா அரபிக் கல்லூரி )  

(2) அல் ஹாஜ் ஏ எம் ஹனிபா ( ஓய்வுபெற்ற ஆசிரியர் முன்னைநாள் காதி நீதிபதி )
செயலாளர் :-  ஏ எம் எம் முஸம்மில் டீ யு ( ஓய்வுபெற்ற அதிபர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரின்  பதுளை மாவட்ட இணைப்பாளர் அ இ ம க உயர் பீட உறுப்பினர்.)

உப செயலாளர் :- ஏ எம் நவாஸ் ( உப அதிபர் – பஃ அல் அதான் ம வி பதுளை)

பொருளாளர் :- அல் ஹாஜ் ஏ எல் எம் பர்ஹான் – (முகாமைத்துவ பங்காளர் சம்சூன் டிரேடர்ஸ்- பதுளை.)

உப பொருளாளர் :- ஜே ரூமி பகீர் டீன் (உரிமையாளர் சிடிசன் பிரிண்டர்ஸ்- பதுளை.)

நிர்வாக சபை உறுப்பினர்கள் :-   
அல் ஹாஜ் எம் எச் எம் மஷூத் (ஜே பி )இ அல் ஹாஜ் எஸ் எச் எம் மன்சூர்     ( மாநகர சபை உறுப்பினர் பதுளை.)அல் ஹாஜ் ஜி எம் இசட் ஆப்தீன் சாதிகீன் ( உரிமையாளர் கிரீன் மவுண்ட் ஹோட்டல் ரூ ரெஸ்டுரன்ட் ) அஷ்ஷைக் எம் எஸ் எம் நளீம் (சீலாணி) ஜனாப் எம் ஆர் ஹஷிம் டீன் (ஜே பி )  அஷ்ஷைக் ஏ ஆர் எம் ரிஸ்கான் (பஹ்மி)  ஜனாப்  எம் நவாஸ் – குரதலாவ அல்ஹாஜ் நிசாமுடீன் –மஹா தன்ன அல் ஹாஜ் பகூர் ராசிக் (ஜே பி ) ஆகியோரைக் கொண்ட சிறந்ததொரு நிர்வாக சபை அமைக்கப் பட்டுள்ளது.
  
மேற்படி புதிய நிர்வாக சபையின் கீழ் புதுப் பொலிவுடன் பல புதிய அபிவிருத்தி திட்டங்களுடன் இயங்கும் இம்மதுராசாவிலிருந்து இனிவரும் காலங்களில் வெளியாகும் உலமாக்கள் இன்ஷாஅல்லாஹ் பல் துறை சார் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் மாறி வரும் உலகின்இ சமூகச் சவால்களுக்கு முகம் கொடுத்து சமூகத்தை வழிநடத்தக் கூடியவர்களாகவும் வெளியாகும் வகையில் இவர்களின் பாடத்திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக இம்மதுரசாவிலிருந்து வெளியாகும் உலமாக்கள் ஒவ்வொருவரும் கணணி துறையிலும் ,ஓட்டோ கேட் ட்ராப்மென்,  கிவ் எஸ்போன்ற துறைகளில் பயிற்றப் பட்டு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப் பட்ட தகுதிவாய்ந்த சான்றிதழ்களுடன் வெளியாகும் வகையில் பல செயற்திட்டங்கள் நடைமுறை படுத்தப் படவுள்ளதாக அறிய முடிகின்றது.

 
புதிய நிர்வாக சபையின் கீழ் கல்லூரி வளாக பள்ளிவாயிலில்  அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கல்லூரிக்குமற்றும் மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் இ மாணவர்கள் மற்றும் உஸ்தாது மார்களுக்கான ஜுப்பா ஆடைகள் ஆகியன தனவந்தர்கள் சிலரால் இலவசமாக வழங்கி வைக்கப் பட்டது.  
சவால்களுக்கு மத்தியில் உயிர்த்தெழும் பதுளை பஹ்மியா மத்ரஸா சவால்களுக்கு மத்தியில் உயிர்த்தெழும் பதுளை பஹ்மியா மத்ரஸா Reviewed by Madawala News on 8/20/2016 09:12:00 PM Rating: 5