Yahya

மரணித்துப்போன தமிழ் தலைமை இணைப்பை கோருவது ஏன்?


தமிழ் பேசும் மாநிலங்களான வடக்கும் கிழக்கும் இணைந்ததான தீர்வொன்றினைத் தவிர வேறு எதனையும் ஏற்கமாட்டோம் என சம்பந்தன் கூறி இருப்பது அவர் இன்னமும் பாசிசப் புலிகளின் சித்தார்ந்தத்தில் இருந்து விடுபடவில்லை என்பதனை தெளிவாகக் காட்டுகிறது

சம்பந்தன் ஐயா அவர்கள் தமிழ் பேசினாலும்இ நாங்கள் முஸ்லிம்கள் என்பதனை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்இ எங்களது பழக்க வழக்கங்கள்bபேச்சு மொழி கலாச்சாரம் என்பன முற்றாக வேறானதொன்றாகும். 

பெரும்பான்மை சிங்கள மக்களால் சிறுபானமையாக வாழ்ந்த தமிழ் மக்கள் எவ்வாறான துன்பங்களை அனுபவித்தர்களோஇ அதனை விட அதிகமான துன்பங்களை வடக்கில் வாழும் பெரும்பான்மை தமிழ் மக்களினால் முஸ்லிம் மக்கள்  அனுபவித்தார்கள் என்பதனை சம்பந்தனால் மறுக்க முடியுமா? 

இனியும் எம்மக்களால் தமிழ் தலைமைகளை நம்ப முடியாது இன்னுமொரு முறை சோதித்துப் பார்க்க நாங்கள் முட்டாள்களும் இல்லை. ஏனென்றால் 

இரவோடு இரவாக வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது இன்றுள்ள அணைந்தது தமிழ் தலைமைகளும் இறந்து போகாமல் உயிருடன்தான் இருந்தனர்இஅவர்களில் ஒருததருக்குகூட இது தவறு முஸ்லிம்களும் மனிதர்கள்தான் எனகூற நாவு துடிக்காதது உங்களின் வரண்டுபோன இதத்யத்தைக்காட்டுகிறது
அதனைவிடவும் அங்கு வாழ்ந்த முஸ்லிம்களுக்கு குறைந்தது ஒரு தமிழ் நண்பர் இருந்திருந்தால் கூட 5000 தமிழ் நண்பர்கள் இருந்திருப்பார்கள்இ இவர்களில் 5 பேராவது வெளியில் வந்து பசித்த வயிறோடும்இ கோர வெயிலில் வெறும் காலோடும் நின்று கொண்டிருந்த தமது முஸ்லிம் நண்பர்களுக்கு குடிக்க தண்ணீராவது கொடுத்தார்களா? இல்லையே ; 

ஆனால் அம்மக்களிடமிருந்து சூறையாடப்பட்ட விலை உயர்ந்த பொருட்களையெல்லாம் மறுநாள் கொடூரப் புலிகள் ஏலத்தில் விட்டபோது முண்டியடித்துக் கொண்டு வாங்க முற்பட்டது அந்த நண்பர்கள்தான் என்பதனை உங்களால் மறுக்க முடியுமா? 
ஆனால் முஸ்லிம் மக்கள்  பட்ட துயரை கண்டும் காணாதது போல் கண்பொத்தி வாய்மூடி மௌனியாக இருந்த தமிழ் மக்களை இறைவன் தண்டிக்காமல் இல்லை.எங்கள் பகுதிகளில் மிருகங்களைக்கூட கம்புகளை நாட்டி இரண்டு வரியில் கம்பி இட்டு அடைத்து வைப்பர் ஆனால் வடக்கு தமிழ் மக்களை மெனிக் பாமில் 9 பட்டுக் கம்பியால் சுத்தப்பட்ட கூண்டுக்குள் மிருகங்களை விடவும் மோசமாக அடைத்து வைத்திருன்தனர் இ இதனை நான் சுட்டிக் காட்டுவது அம்மகளை நோவினை செய்வதற்காக அல்ல கண்முன்னே அநீதி நடந்தும் கண்கெட்டவர்கள்போல் இருந்தமையின் விளைவுகளால் ஏற்பட்ட வரலாற்றை சம்பந்தன் அவர்களுக்கு ஜாபகப்படுத்த விரும்புகிறேன். .  

வரலாறுகளை திரும்பிப் பாருங்கள் உங்களுக்கு எத்தனை உதாரணங்கள் வேண்டும்.பள்ளிவாயல்களுக்குள் முஸ்லிம்கள் சுடப்பட்டது வயல்காணிகளுக்கு கப்பம் அறவிட்டது முஸ்லிம் வீடுகளுக்குள் புகுந்து கொலை கொள்ளை கற்பழிப்பு என மூச்சு விடாமல் எங்களால் உதாரனங்களையும் சம்பவங்களையும் கூற முடியும். 

உங்களை நாங்கள் பலமுறை சோதித்துப் பார்த்து விட்டோம் நீங்கள் தங்கமல்ல ஆகவே போலியை இன்னுமொருமுறை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. 

கடல் நீர் என்ற அடிப்படையில் கருங்கடலும் செங்கடலும் ஒட்டி இருந்தாலும் இரண்டற கலக்காமல் தனித்தனியாக இருப்பது போன்று இருக்கவே எமது முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர் அதனால்தால் விருப்பத்துக்கு மாறாக இணைக்கப்பட்ட வடகிழக்கு சட்டரீதியாக பிரிக்கப்பட்டதன் பின்பு மீண்டும் இணைப்பது என்பது உங்கள் கனவாக இருந்துவிட்டுப்போகட்டும்.மாறாக இணைப்பதற்கு முற்பட்டால் அதனை தடுத்து நிறுத்த எமது வீரமிக்க இளைஞ்சர்களும் மக்களும் தயாராகவே இருக்கின்றோம் என்பதனை சம்பந்தன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்ள நாங்கள் விரும்புகின்றோம்

தொடரும் ..
மரணித்துப்போன தமிழ் தலைமை இணைப்பை கோருவது ஏன்? மரணித்துப்போன தமிழ் தலைமை இணைப்பை கோருவது ஏன்? Reviewed by Madawala News on 8/27/2016 08:16:00 PM Rating: 5