மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி. இப்றா லெப்பை ஹாஜி ஜெமீல் “பிரான்ஸ் கற்கையாளர் பட்டம்” பெறுகின்றார்.


(பி.எம்.எம்.ஏ.காதர்)

சர்வதேச விவகாரங்களுக்கும் இராஜ தந்திரத்துக்குமான கலாநிதி பட்டத்தைப் பெற்றுள்ள  மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி.இப்றா லெப்பை ஹாஜி ஜெமீல் பிரான்ஸிலுள்ள பிரான்ஸ் விஞ்ஞானத்திற்கான அராரட் சர்வதேச கல்விக்கழகத்தினால்;'பிரான்ஸ் கற்கையாளர் பட்டம்'பெறுகின்றார்

இவர் தற்போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் முகாமையாளராகக் கடமையாற்றுகிறார்.இவர் ஜெனீவாவில் நடைபெறவுள்ள உலக விஞ்ஞான காங்கிரஸில் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.

7வது உலக விஞ்ஞான காங்கிஸில் மாநாட்டில் கலாநிதி ஜெமீல்; உயர்கலாநிதி பட்டத்துக்கான ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பிக்கவுள்ளார். கலாநிதி ஜெமீல் சமர்ப்பிக்கவுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையானது ஆசிய நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக்கான சர்வதேச தொடர்புகளும் விவகாரங்களும் என்ற தலைப்பிலேயே அமைந்துள்ளது.

மொஸ்கோவிலுள்ள அடிப்படைக் கல்விகளுக்கான சர்வதேச பல்கலைக்கழகத்தினுடைய உயர்கற்கைகளுக்கான சர்வதேச ஆணைக்குழுவிடம் மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.7 வது உலக விஞ்ஞானிகள் காங்கிரஸ் மாநாடு எதிர்;வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை சுவிஸ்லாந்து ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இந்த 7வது உலக விஞ்ஞானிகள் காங்கிரஸானது சுவிஸ்லாந்திலுள்ள சர்வதேச விஞ்ஞானிகள் நோக்கங்களுக்கான ஸ்தாபனமும், பிரான்ஸிலுள்ள அராரட் சர்வதேச விஞ்ஞான கல்விச்சாலை மற்றும் மொஸ்கோவிலுள்ள அடிப்படைக் கல்விக்கான சர்வதேச பல்கலைக்கழகமும் அதனுடன் அமைந்த சர்வதேச உயர் கற்கைகளுக்கான கவுன்சிலும் கூட்டாக இணைந்தே இந்த 7 வது உலக விஞ்ஞான காங்கிரஸ் மாநாடு நடாத்தப்படுகின்றது.  
மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி. இப்றா லெப்பை ஹாஜி ஜெமீல் “பிரான்ஸ் கற்கையாளர் பட்டம்” பெறுகின்றார். மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி. இப்றா லெப்பை ஹாஜி ஜெமீல் “பிரான்ஸ் கற்கையாளர் பட்டம்” பெறுகின்றார். Reviewed by Madawala News on 8/28/2016 11:34:00 PM Rating: 5