கனடா வான்கூவர் கடற்கரையை துப்புரவு செய்யும் இலங்கை முஸ்லிம்கள். c



கனடா வன்கூவரில் இயங்கும் இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான SLIF ஏற்பாடு செய்த கடற்கரை துப்பரவு செய்யும் செயற்திட்டம் இன்று ஆகஸ்ட் முதலாம் திகதி சென்டானியா பீச்சில் மிக சிறப்பாக நடந்தேறியது.

இதுபற்றி மேலும் அறியவருவதாவது

இங்கு வாழும் இலங்கை முஸ்லிம்களின் முயற்சியில் முறையான அனுமதியுடன் மிக சிறப்பாக நடைபெற்ற இந்த பீச் கிளீனிங் செயற்திட்டத்தில் அதிகளவான இலங்கை முஸ்லிம்களும் இலங்கையைச்சேர்ந்த மாற்று மத தமிழ்பேசும் சகோதரர்களும்  குடும்பமாக அர்பணிப்புடன் கலந்து சிறப்பித்தனர்.

இதில் கலந்து கொண்டோருக்கும் மற்றவர்களுக்கும் இலங்கை சம்பிராத உணவுகளான பாற்சோறு கஞ்சி போன்றவை பரிமாரப்பட்டன.
அதிகமானோரின் பாராட்டை பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு சிலிப் அமைப்பினர் தமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.

Zacky junaid, vancouver.




கனடா வான்கூவர் கடற்கரையை துப்புரவு செய்யும் இலங்கை முஸ்லிம்கள். c கனடா வான்கூவர் கடற்கரையை துப்புரவு செய்யும்  இலங்கை முஸ்லிம்கள். c Reviewed by Madawala News on 8/02/2016 07:01:00 PM Rating: 5