Ad Space Available here

ஓட்டமாவடி தேசிய பாடசாலை - தினகரன் நாளிதழ் இணைந்து நடாத்தும் மாபெரும் சிறுகதை, கட்டுரை மற்றும் முகநூல் பதிவுப் போட்டி.ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யும் தினகரன் நாளிதழும் இணைந்து நடாத்தும் மாபெரும் சிறுகதை, கட்டுரை மற்றும் முகநூல் பதிவுப் போட்டி - 2016 / 2017

கல்லூரியின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பழைய மாணவர் சங்கம் நூற்றாண்டு நினைவு முத்திரை வெளியீடு, மாகாண ரீதியான கிரிக்கற் சுற்றுப் போட்டி, நினைவு மலர் வெளியீடு, பாடசாலைப் பூந்தோட்டம் அமைத்தல், கலை நிகழ்வுகள் கொண்ட மூன்று நாள் கொண்டாட்டம், கண்காட்சி மற்றும் கல்லூரி பௌதீக வளங்களை மேம்படுத்துதல் போன்ற திடடங்களை முன்னெடுத்து வருகிறது.

அந்த அடிப்படையில் பின்வரும் போட்டி நிகழ்ச்சிகள் 'தினகரன்' வார மஞ்சரியுடன் இணைந்து நடத்தப்படுகின்றன.

இப் போட்டி நிகழ்ச்சிகளுக்கான பொதுவான விதிமுறைகள்: 
--------------------------------------------------------------

*இலங்கையைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் பங்குபற்றலாம்.
*வயதெல்லை 15 தொடக்கம் 55.
*ஆக்கங்கள் சொந்தப்படைப்பாக இருப்பதுடன், ஏற்கனவே அச்சில் வந்ததாகவோ, மொழிபெயர்ப்பாகவோ, இணையத்திலிருந்து பிரதி பண்ணப்பட்டவையாகவோ இருக்கக்கூடாது.

*ஒருவர் எத்தனை படைப்புக்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால், ஒரு படைப்பாளி ஒரு பரிசுக்கு           மாத்திரமே தகுதியுடையவராவார்.
*படைப்பாளியின் முழு விபரங்கள் அடையாள அட்டையிலுள்ளது போலப் பெயர், முகவரி, அடையாள அட்டை     இலக்கம், மின்னஞ்சல் முகவரி (இருப்பின்), தொலைபேசி எண் ஆகியன தனித்தாளில் எழுதப்பட்டுப் படைப்புடன்           சேர்த்து அனுப்பப்படல் வேண்டும்.
*ஓட்டமாவடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க மற்றும் கிளைகளின் நிர்வாக சபை உறுப்பினர்களோ அவர்தம் குடும்பத்தினரோ இப்போட்டிகளில் பங்குபற்ற முடியாது.

*தானே எழுதியது என போட்டியாளரின் கையொப்பமிடப்பட்ட உறுதிக் கடிதம் ஒன்று படைப்புடன் இணைத்து      அனுப்பப்படல் வேண்டும்.
படைப்புகள்  தபால் மூலம் மட்டுமே அனுப்பலாம்.
 *அனுப்பப்பட்ட படைப்புகளைப் பாடசாலையின் நூற்றாண்டு விழா மலரில் பிரசுரிக்கவும், நூலாக்கம் செய்யவும்      ஓட்டமாவடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் முழு உரிமை பெற்றிருக்கும்.
*ஆக்கங்களை அனுப்பவேண்டிய கடைசிநாள் 01.10.2016 ஆகும். இத்திகதிக்குப் பிந்திக் கிடைக்கும் படைப்புகள்      ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

*சிறுகதைகளும் கட்டுரைகளும்
Old Boys Association,
BT/ Oddamavadi Central College,
Oddamavadi
என்ற முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும். கடித உறையின் இடது புற மேல் மூலையில் சிறுகதையாயின்  'நூற்றாண்டு விழா போட்டிகள் - சிறுகதை' என்றும் கட்டுரையாயிருப்பின் 'நூற்றாண்டு விழா போட்டிகள் - கட்டுரை' என்றும் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

வெற்றிபெற்ற ஆக்கங்களுக்கான பரிசுகள் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவின்போது     வழங்கப்படும்.

சிறுகதை
---------
தலைப்பு பொதுவானது.

சிறுகதைகள் தட்டச்சு செய்யப்பட்டோ, கையெழுத்துப் பிரதியாகவோ அனுப்பலாம். தட்டச்சு எனின், ஏ4 தாளில் ஐந்து  பக்கங்களுக்குக் குறையாமலும் கையெழுத்தில் எட்டுப் பக்கங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

முதல் பரிசு - ரூபா.25,000.00, இரண்டாம் பரிசு - ரூபா.15,000.00  மூன்றாம் பரிசு -  ரூபா. 10,000.00 மற்றும்      பத்து ஆறுதல் பரிசுகளும் சான்றிதழ்களும்.

கட்டுரை - தலைப்புகள் :
-------------------------
இலங்கையின் ஊடகத்துறை - ஜனநாயகத் துஷ்பிரயோகமும் ஜனநாயகத்துக்கான போராட்டமும்.

இனரீதியாகச் சிந்தித்தல் - எதிர்காலத்துக்கு நன்மையா? தீமையா?
 இலங்கையின் சுற்றுச் சூழல் எதிர்நோக்கும் நெருக்கடிகளும் மாற்று ஏற்பாடுகளும்.

இலங்கையின் இனமுரண்பாடுகளுக்கான தீர்வின் அவசியமும் வழி முறைகளும்.

இஸ்லாம் என்பது பயங்கரவாதம் அல்ல!

விதிகள்
--------

கட்டுரைகள் 1250 தொடக்கம் 1500 சொற்களுக்குள் அமைந்திருக்க வேண்டும்.
 கட்டுரை அல்லது அதன் பகுதிகள் இணையத்திலிருந்து அல்லது வேறிடங்களிலிருந்து     பிரதிபண்ணப்பட்டிருந்தால் நிராகரிக்கப்படும்.
கட்டுரைக்கான உசாத்துணை நூல்கள் ஏதுமிருப்பின் அவை குறிப்பிடப்படல் வேண்டும்.

முதல் சுற்றில் தெரிவாகும் முதல் இருபது கட்டுரையாளர்கள் நடுவர்கள் முன்னிலையில் கட்டுரை எழுதுவதற்காக ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கு நேரில் அழைக்கப்படுவார்கள்.

அவர்களுக்கான போக்குவரத்துச் செலவு  வழங்கப்படுவதோடு, உணவு மற்றும் தங்குமிட வசதிகள் செய்து தரப்படும்.

முதல் பரிசு - ரூபா.25,000.00 இரண்டாம் பரிசு - ரூபா.15,000.00, மூன்றாம் பரிசு - ரூபா. 10,000.00 மற்றும் பத்து ஆறுதல் பரிசுகளும் சான்றிதழ்களும்.

முகநூல் பதிவு
---------------

பங்குபெற விரும்புவோர் இதற்கெனப் பிரத்தியேகமாக நிறுவப்பட்டுள்ள முகநூல் பக்கத்தின் ; (https://www.facebook.com/groups/865588730214253/)
உள்பெட்டியில் பெயர் விபரத்தோடு தேசிய அடையாள அட்டையளவு புகைப்படத்தையும் இணைத்து அனுப்புவதன் மூலம் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

போட்டியாளர் ஒருவர், குறித்த முகநூல் பக்கத்தில் அறிவிக்கப்படும் கால வரையறைக்குள் நான்கு தனித்தனிப் பதிவுகளை இடவேண்டும்.
பதிவுகள் உரைநடையில் 40 தொடக்கம் 50 சொற்களுக்குள் அமைந்திருக்க வேண்டும்.

சுற்றுச்சூழல், உள்நாட்டுஃசர்வதேச அரசியல், மனித உரிமைகள், போதைவஸ்துப் பாவனை, இன நல்லுறவு, உலகமயமாதல், நுகர்வுக் கலாசாரம், கல்வி, கலாசாரம், பண்பாடு, கலை இலக்கியம் போன்றவற்றுள் ஏதாவதொன்றைச் சார்ந்ததாக பதிவுகள் அமையலாம்.
நான்கு பதிவுகளும் ஒரே விடயம் தொடர்பாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

மேலதிக விபரங்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும்.

முதல் பரிசு - ரூபா.10,000.00 இரண்டாம் பரிசு - ரூபா.5,000.00, மூன்றாம் பரிசு - ரூபா. 3,000.00

ஓட்டமாவடி தேசிய பாடசாலை - தினகரன் நாளிதழ் இணைந்து நடாத்தும் மாபெரும் சிறுகதை, கட்டுரை மற்றும் முகநூல் பதிவுப் போட்டி. ஓட்டமாவடி தேசிய பாடசாலை - தினகரன் நாளிதழ் இணைந்து நடாத்தும் மாபெரும் சிறுகதை, கட்டுரை மற்றும் முகநூல் பதிவுப் போட்டி. Reviewed by Madawala News on 8/22/2016 02:16:00 PM Rating: 5