Free Space

யோஷித்தவின் CSN இற்கு சொந்தமான 157 மில்­லியன் ரூபா அரசுடமையாக்கபட்ட சம்பவத்தின் விபரம்.



(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் புதல்­வர்­களில் ஒரு­வ­ரான யோஷித ராஜ­ப­க்ஷ­வுக்குச் சொந்­த­மா­னது எனக் கூறப்­ப டும் சி.எஸ்.என். தொலைக்­காட்­சியின் சட்ட விரோத முத­லீ­டான 15.5 கோடி ரூபாவை அரச உடை­மை­யாக்க கடு­வலை நீதிவான் தம்­மிக்க ஹேம­பால நேற்று உத்­த­ர­விட்­டுள்ளார். நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று கடு­வலை நீதிவான் தம்­மிக்க ஹேம­பால முன்­னி­லையில் தாக்கல் செய்த அறிக்­கையின் பின்னர் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கையை ஏற்றே அரச உடை­மை­யாக்கும் மேற்­படி உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார்.

கால்ட்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் அல்­லது சி.எஸ்.என். எனப்­படும் நிறு­வனம் மூலங்­களை வெளிப்­ப­டுத்த முடி­யாத 234 மில்­லியன் ரூபா முத­லீட்டில் ஆரம்­பிக்­கப்பட்­டமை, அத­னூ­டாக கறுப்புப் பணம் சுத்­தி­க­ரிப்பு செய்­யப்பட்­டமை தொடர்பில் ஐவ­ருக்கு எதி­ராக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ரணை செய்து வரு­கின்­றது.

யோஷித ராஜ­ப­க் ஷ, ரொஹான் வெலி­விட்ட, கவிஷான் திஸா­நா­யக்க, அஷான் பெர்னாண்டோ மற்றும் நிஸாந்த ரண­துங்க ஆகியோர் இந்த விவ­கா­ரத்தில் சந்­தேக நபர்­க­ளாகப் பெய­ரி­டப்பட்டு அவர்­க­ளுக்கு எதி­ராக இந்த விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

இந்நிலையில் இது குறித்த மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வந்த நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சேர­சிங்­கவின் கீழான பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அனுர பிரே­ம­ரத்ன தலை­மை­யி­லான பொலிஸ் குழு நேற்று கடு­வலை நீதி­வா­னிடம் மேல­திக விசா­ரணை அறிக்கை ஒன்­றினை தாக்கல் செய்­தது.

நீதிவான் தம்­மிக்க ஹேம­பா­லவின் உத்­தி­யோ­க­பூர்வ அறையில் வைத்து குறித்த அறிக்­கையை தாக்கல் செய்த நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரிகள், சி.எஸ்.என். நிறு­வனம் சட்டவிரோ­த­மாக முத­லீடு செய்­த­தாகக் கூறப்­படும் 157.5 மில்­லியன் (சுமார் 15.5 கோடி) ரூபா தொடர்பில் மன்­றுக்கு அறிக்­கை­யிட்­டனர்.

எம்ட்ரேச் எனும் தனியார் நிறு­வ­னத்தின் பெயரில் இந்த பணம் பேன் ஏஷியா வங்­கியில் வைப்புச் செய்­யப்பட்­டி­ருந்த நிலையில் குறித்த வங்­கிக்­க­ணக்கு கடந்த வருடம் நவம்பர் 5 ஆம் திகதி முதல் முடக்­கப்பட்­டி­ருந்­தது.

இந் நிலையில் குறித்த தனியார் நிறு­வ­னத்தின் தலைவர் ஊடாக பேன் ஏஷியா வங்­கிக்கு குறித்த வங்­கிக்­க­ணக்கை மீள செயற்­ப­டுத்­து­மாறு கோரிக்கை கடிதம் முன்­வைக்­கப்பட்­டுள்ள நிலையில் அதற்கு அனு­ம­தி­ய­ளிக்­கு­மாறும் அத­னூ­டாக அக்­க­ணக்கில் உள்ள 157.5 மில்­லியன் ரூபாவை அர­சு­டை­மை­யாக்கி திறை­சேரியின் கணக்­குக்கு மாற்ற உத்­த­ர­விட வேண்டும் எனவும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை ஊடாக மன்றை கோரியுள்ளது.

இந் நிலையிலேயே குறித்த 157.5 மில்லியன் ரூபாவை அரச உடைமையாக்கும் கோரிக்கைக்கு நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.
யோஷித்தவின் CSN இற்கு சொந்தமான 157 மில்­லியன் ரூபா அரசுடமையாக்கபட்ட சம்பவத்தின் விபரம். யோஷித்தவின் CSN இற்கு சொந்தமான 157 மில்­லியன் ரூபா அரசுடமையாக்கபட்ட சம்பவத்தின் விபரம். Reviewed by Madawala News on 8/11/2016 10:18:00 AM Rating: 5