Accaddemy

(அக்குரணை) அம்பதென்னை பகுதியில் தீப்பிடித்த நிலையில் சடலம் மீட்பு. உறவினர்கள் விபரம் தேவை. #death



- ஜே.எம்.ஹபீஸ்-

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பதென்னை பகுதியில் சிறிய வீடு ஒன்றில் தனியாக வசித்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் தீயினால்  உயிரிழந்துள்ள நிலையில் கட்டுகஸ்தோட்டை பொலீஸார் கண்டெடுத்துள்ளனர்.

அவரை அடையாலம் கான்பதற்கு உதவுமாறு பொலிசார் கேட்டுக் கொள்கின்றனர்.

கடந்த இரண்டாம் திகதி இரவு நித்திரைக்குச் சென்ற இவரை காலையில் தீப் பற்றிய நிலையில் பிரதேச மக்கள் கண்டுள்ளனர். பொலீஸாருக்கு தகவல் வழங்கியதுடன் பொலீசார் வந்து சடலத்தை மீட்டு கண்டி வைத்திய சாலையில் வைத்துள்ளனர்.

சுமார் 30 வருடங்களாக இப் பிரதேசத்தில் வசித்துள்ள இவரது உறவினர்கள் பற்றி எதுவும் பிரதேச மக்களுக்குத் தெரியாதுள்ளது.

இவரது பெயர் கே.எஸ்.  ராஜா என கூறப்படுவதாகவும் கண்டி பன்விலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தகவல் கிடைத்துள்ளதாகவும்  கட்டுகஸ்தோட்டை பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

இவரது சடலத்தை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொலீஸார் பொது மக்களை கேட்டுள்ளனர். .

(அக்குரணை) அம்பதென்னை பகுதியில் தீப்பிடித்த நிலையில் சடலம் மீட்பு. உறவினர்கள் விபரம் தேவை. #death (அக்குரணை) அம்பதென்னை பகுதியில் தீப்பிடித்த நிலையில் சடலம் மீட்பு. உறவினர்கள் விபரம் தேவை. #death Reviewed by Madawala News on 8/08/2016 08:24:00 AM Rating: 5