Free Space

இன்றைய போட்டியில் வெல்றோம் .. தில்ஷானை வெற்றிவாகை­யுடன் வழி­ய­னுப்பி வைக்கிறோம். #dilly



(எம்.எம். சில்­வெஸ்டர்)

இலங்­கைக்கு கிரிக்கெட் சுற்­றுலா மேற்­கொண்­டுள்ள அவுஸ்­தி­ரே­லிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடை­யி­லான 3 ஆவது சர்­வ­தேச ஒருநாள் போட்டி இன்று பிற்­பகல் 2.30 மணிக்கு தம்­புள்ளை ரங்­கிரி சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­ன த்தில் பக­லி­ரவுப் போட்­டி­யாக ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இலங்­கையை பொறுத்­த­மட்டில் இப்­போட்டி மிகவும் முக்­கி­ய­மிக்க போட்­டி­யாகும். காரணம் 17 வரு­ட­கா­ல­மாக இலங்கை கிரிக்­கெட்­டுக்கு சேவை­யாற்­றிய சக­ல­துறை வீரரும் முன்னாள் அணித்­த­லை­வ­ரு­மான தில­க­ரட்ண டில்ஷான் விளை­யாடும் கடைசி சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­யாகும்.

ஆகையால் அவரை வெற்றிவாகை­யுடன் வழி­ ய­னுப்பிவைக்க வேண்­டு­மென இலங்கை கிரிக் கெட் அணித்­த­லைவர் எஞ்­சலோ மெத்­தி யூஸ் உள்­ளிட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

இலங்கை அணியைப் பொறுத்­த­மட்டில் துடுப்­பாட்டம், பந்து வீச்சு, களத்­த­டுப்பு என அனைத்து துறை­க­ளிலும் சற்று முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளது.

துடுப்­பாட்ட வரிசை மிகவும் பல­மா­ன­தா­க­வுள்­ளது. எனினும் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்கள் நடை­பெற்று முடிந்த இரண்டு போட்­டி­க­ளிலும் சரி­வர பிர­கா­சிக்­க­வில்லை. மேலும் முன்­னணி வேகப்­பந்து வீச்­சா­ளர்கள் காய­ம­டைந்­துள்­ளமை பெரும் குறையே.

சுழல்­பந்­து­வீச்சில் புது­வ­ர­வான அமில் அபோன்சோ மிகவும் நுட்­பத்­தி­ற­னுடன் பந்து வீசி­வ­ரு­கிறார். இவரின் வருகை இலங்கை கிரிக்­கெட்­டில் பாரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தக்­கூடும் என கிரிக்கெட் விமர்­ச­கர்கள் கரு­து­கின்­றனர். இது­வரை 2 போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள அமில, 19.2 ஓவர்கள் பந்­து­வீசி 45 ஓட்­டங்­களை விட்­டுக்­கொ­டுத்து 5 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி­யுள்ளார்.

இதில் சிறப்­பம்சம் என்­ன­வெனில், அவர் வழங்­கிய 45 ஓட்­டங்­களில் பௌண்­ட­ரியோ அல்­லது சிக்­ஸ­ரொன்றோ அடிக்­கப்­ப­ட­வில்லை என்­ப­துதான்.
இதே­வேளை, அவுஸ்­தி­ரே­லிய அணியின் கிரிக்கெட் தலை­வ­ரான ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்குத் திரும்­பி­யுள்­ள­தால்,

அணியின் தலைமைப் பொறுப்பு அதி­ரடித் துடுப்­பாட்ட வீர­ரான டேவிட் வோர்­ன­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஸ்மித்தின் வெற்­றி­டத்தை நிரப்­பு­வ­தற்கு அணியில் இணைக்­கப்­ப­டா­ம­லி­ருந்த மற்றொரு அதிரடித் துடுப்பாட்ட வீரரான கிளன் மெக்ஸ்வெல் அணிக்கு மீள அழைக்கப் பட்டுள்ளார். அவ்வணியின் துருப்புச் சீட்டான மிட்செல் ஸ்டார்க் இலங்கை அணியின் துடுப் பாட்ட வீரர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவார்.

இன்றைய போட்டியில் வெல்றோம் .. தில்ஷானை வெற்றிவாகை­யுடன் வழி­ய­னுப்பி வைக்கிறோம். #dilly இன்றைய போட்டியில் வெல்றோம் .. தில்ஷானை  வெற்றிவாகை­யுடன் வழி­ய­னுப்பி வைக்கிறோம். #dilly Reviewed by Madawala News on 8/28/2016 11:33:00 AM Rating: 5