Accaddemy

எதிர்வரும் தேர்தல் எப்படி நடக்கும்? ஒரு ஹைலைட் பார்வை. e

உள்ளூராட்சி தேர்தல்களுக்கான முஸ்தீபுகள் பல்வேறு மட்டங்களிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன...
.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல கட்சித்தலைவர்களும் இதற்காக தற்போது ஆயத்தமாகி வருவதை அவதானிக்கமுடிகிறது.
.

பெரும்பாலும் அடுத்த ஆண்டு முதல் ஆறுமாதங்களுக்குள் நாடு முழுவதும் தேர்தல் இடம்பெறுபென தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் எதிர்வு கூறியுள்ளன!
.

இந்த தேர்தல் நடாத்தப்படவிருப்பது ஒரு புதிய முறையிலாகும்.
.

தொகுதிவாரி முறை மற்றும் விகிதாசார முறை இரண்டையும் கலந்ததாக இது அமையுமென எதிர்வு கூறப்பட்ட போதும் எல்லா உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இந்த கலப்பு முறை அமுலாகாது என்பதே இப்போதைய ஹைலைட்டாகும்!!!
.

விகிதாசார தேர்தல் முறை நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கம் சிறுபான்மை சமூகங்களின், சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கேயாகும்.
.

ஆகவே உள்ளூராட்சி தேர்தல்களில் இப்போது அறிமுகமாகவுள்ள கலப்பு தேர்தல் முறையானது பல்லினங்களும் கலந்து வாழும் கொழும்பு மாநகர சபை, திருகோணமலை நகர சபை, கல்முனை மாநகர சபை, கண்டி மாநகர சபை இன்னும் இவை போன்ற இடங்களுக்கும் மாத்திரமே அமுலாகும்.
.

இதில் சிலவேளை தோல்வியடைகிறவர்களும் விகிதாசார முறைப்படி ( best losers) பிரதிநிதித்துவங்களை தக்கவைத்துக்கொள்ளவும் வாய்ப்புள்ளது!
.

ஆனால் காத்தான்குடி நகரசபை போன்ற ஓரினம் மாத்திரமே வாழுகிற அல்லது மட்டக்களப்பு மாநகர சபை போன்ற முஸ்லிம்கள் குறைந்தளவு வாழுகிற உள்ளூராட்சி மன்றங்களுக்கு தொகுதிவாரி தேர்தல் முறை மாத்திரமே அமுல்படுத்தப்படவுள்ளது.
.

இங்கே தோல்வியடைகிற கட்சிகள் ஆசனம் பெறுகிற விகிதாசார முறை (best loser) கணக்கில் வராது!
.

எனவே இவ்வாறான உள்ளூராட்சி மன்றங்களில் ஏலவே தோற்றாலும் ஆசனங்களைப்பெற்றுவிடலாம் என்று ஆசை கொண்ட சிறிய கட்சிகளுக்கு அல்லது அரசியல் குழுக்களுக்கு இந்த தேர்தல் முறை பாரிய பின்னடைவுகளை வழங்கக்கூடும்!
.

எப்படியோ எதிர்வரும் தேர்தல் பல சுவாரஸ்யங்களையும், எதிர்பாராத திருப்பு முனைகளையும் நாட்டின் அரசியல் கட்டமைப்பில் ஏற்படுத்தப்போவது மட்டும் உறுதி!

எதிர்வரும் தேர்தல் எப்படி நடக்கும்? ஒரு ஹைலைட் பார்வை. e எதிர்வரும் தேர்தல் எப்படி நடக்கும்? ஒரு ஹைலைட் பார்வை. e Reviewed by Madawala News on 8/05/2016 01:42:00 PM Rating: 5