tg travels

அதிகரிக்கிறது டீசல் மற்றும் பெற்றோல் விலை.



டீசலுக்கான வரி அதிகரிக்கப்படவுள்ளதால் டீசல் மற்றும் பெற்றோல் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி (IOC) நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வரி அதிகரிப்பு, தமது வணிகத்தில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என அதன் முகாமையாளர் ஷியான் போரா குறிப்பிட்டுள்ளார்.

 பெற்றோலுக்கு வரி அதிகரிக்கப்படாவிட்டாலும் டீசலுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள வரி, அதிலும் தாக்கம் செலுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில், இதற்கு பொறுப்பான அமைச்சிடம் தொடர்ந்தும் தெரியப்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
அதிகரிக்கிறது டீசல் மற்றும் பெற்றோல் விலை. அதிகரிக்கிறது டீசல் மற்றும் பெற்றோல் விலை. Reviewed by Madawala News on 8/30/2016 01:55:00 PM Rating: 5