மாகாண போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த றிஸ்வான் நீக்கப்பட்டு அநீதி இழைப்பு. h



(எஸ்.எம்.அறூஸ்)

அண்மையில் இடம்பெற்ற அம்பாரை மாவட்ட விளையாட்டுப்போட்டியில் உயரம்பாய்தல் நிகழ்ச்சியில்  இரண்டு வீரா்கள் 1.74 மீற்றர் பாய்ந்தனர்.  ஒரு பவுள்  அடிப்படையில் அட்டாளைச்சேனை  லக்கி விளையாட்டுக் கழக வீரர் ஏ.எம்.எம்.றிஸ்வானுக்கு மூன்றாமிடம் கிடைக்கப்பெற்றது. மூன்றாமிடம் பெற்றதன் மூலம் மாகாண விளையாட்டுப் போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

மாகாண விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஏ.எம்.எம்.றிஸ்வான் கடுமையான பயிற்சிகளைப் பெற்றுவருவதுடன் அண்மையில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் ஏ.எம்.எம்.றிஸ்வான் 1.78 மீற்றர் பாய்ந்து  இரண்டாமிடம் பெற்று  தனது திறமையை அதிகரித்திருந்தார்.

இவ்வாறாள நிலையில் கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டி இம்மாதம் 27,28ம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. மாகாண போட்டிக்கு ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்த லக்கி வீரா் றிஸ்வான் நீக்கப்பட்டு மற்றும் ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்வதற்காக பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த வீரருக்கு ஏமாற்றம் அளித்ததுடன் அவரது  அடிப்படை உரிமை மீறலுமாகும்.

மாவட்டப் போட்டியில் கலந்து கொள்ளாத ஒரு வீரருக்கு எப்படி மாகாணப் போட்டியில் பங்குபற்ற அனுமதி அளிப்பது. இது கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.

இந்த விடயத்தில் கிழக்கு மாகாண விளையாட்டமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட வீரருக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அட்டாளைச்சேனை பிரதேச வீரா்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



மாகாண போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த றிஸ்வான் நீக்கப்பட்டு அநீதி இழைப்பு. h மாகாண போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த றிஸ்வான் நீக்கப்பட்டு அநீதி இழைப்பு. h Reviewed by Madawala News on 8/23/2016 07:08:00 PM Rating: 5